சர்வதேசப் பிரச்னைகளில் சிக்கித் தவிக்கும் திருப்பூர்!

திருப்பூர் : கள்ளநோட்டு புழக்கம் அதிகரிப்பு, வெளிநாட்டினரின் அத்துமீறல் என திருப்பூர் மாநகரம் சர்வதேசப் பிரச்னைகளில் சிக்கித் தவிக்கிறது. இதனால் எதிர் வரும் ஆபத்துகளை முன்கூட்டியே கண்டறிந்து தடுக்க வே
Updated on
2 min read

திருப்பூர் : கள்ளநோட்டு புழக்கம் அதிகரிப்பு, வெளிநாட்டினரின் அத்துமீறல் என திருப்பூர் மாநகரம் சர்வதேசப் பிரச்னைகளில் சிக்கித் தவிக்கிறது. இதனால் எதிர் வரும் ஆபத்துகளை முன்கூட்டியே கண்டறிந்து தடுக்க வேண்டிய கட்டாயம் மத்திய, மாநில அரசுகளுக்கு ஏற்பட்டுள்ளது.

 பின்னலாடை தொழில் வளம் நிறைந்த திருப்பூர், ஏற்றுமதி வர்த்தகம்

மூலம் ஆண்டுக்கு | 11 ஆயிரம் கோடி அன்னியச் செலவாணியும், உள்நாட்டு வர்த்தகம் மூலம் | 5 ஆயிரம் கோடி வருவாயும் ஈட்டி வருகிறது. ஏற்றுமதி வர்த்தகத்தை ஒரு சில ஆண்டுகளில் | 20 ஆயிரம் கோடியாக்கத் திட்டமிடப்பட்டு அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் நிலையில் திருப்பூரில் தற்போது சர்வதேச ஆபத்துகள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டுள்ளன.

 இந்த ஆபத்துக்களுக்கு, பின்னலாடை வர்த்தகத்துக்காக திருப்பூர் வரும் நைஜீரியா, கென்யா உள்ளிட்ட பின்தங்கிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் முதல் காரணியாக உள்ளனர். ஏற்றுமதி வர்த்தகத்துக்காக திருப்பூரில் தயாராகும் முதல்தர பின்னலாடைகளின்

உற்பத்தியின்போது சிறுசிறு குறைபாடுகளுடன் கூடிய சுமார் 10 சதவீத ஆடைகள் கழிக்கப்படுகின்றன. அத்தகைய குறைபாடுகளுடைய பின்னலாடைகள்

தென்னாப்பிரிக்கா, நைஜீரியா, கென்யா உள்ளிட்ட பின்தங்கிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

 இதற்காக, வர்த்தக நோக்கில் திருப்பூர் வரும் அந்நாட்டினர் முறைகேடாக பாஸ் போர்ட், விசா உள்ளிட்ட ஆவணங்களின்றியும், காலம் கடந்த விசாவுடனும்

திருப்பூரில் தங்கியிருப்பது அதிகரித்துள்ளது. அவ்வாறு, முறைகேடாக தங்கியுள்ளவர்கள் சில நேரங்களில் போதைப்பொருட்கள் கடத்தல் உள்ளிட்ட குற்ற நடவடிக்கைகளிலும் ஈடுபடுவதாக போலீஸôருக்குப் புகார்கள் வந்துள்ளன.

 இரவு நேரங்களில் திருப்பூர் சாலைகளில் சுற்றித்திரியும் அந் நாட்டினர் கலாசார ரீதியாக திருப்பூர் மக்களுக்கு பல்வேறு நெருக்கடிகளையும் கொடுக்கின்றனர். இதுபோன்ற

முறைகேடுகளில் ஈடுபட்டதாக கடந்த 2009 செப்டம்பர் முதல் இதுவரை 35 நைஜீரியர்களை திருப்பூர் போலீஸôர் கைது செய்துள்ளனர்.

பாகிஸ்தானிலிருந்து கள்ளநோட்டுகள்...

  கள்ளநோட்டுப் புழக்கம் என்பது திருப்பூரில் சர்வசாதாரணமாகிவிட்டது.  

கள்ளநோட்டுக் கும்பல் தொடர்ந்து கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்டு வருகின்றன. இது தொடர்பாக இம்மாவட்டத்தில் கடந்த ஒரு ஆண்டில் மட்டும் 6 வழக்குகள் பதிவாகியுள்ளதுடன், | 5.90 லட்சம் மதிப்புள்ள 997 கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், கடந்த 3 மாதங்களில் மட்டும் 4 வழக்குகளில் 762 கள்ள நோட்டுகள் சிக்கியுள்ளன என்றும் போலீஸôர் தெரிவிக்கின்றனர்.

 கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விடும் குற்றச்செயல்களில் மேற்கு வங்கம், பிகார் உள்ளிட்ட வட மாநில தொழிலாளர்கள் அதிகளவில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

 அவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட கள்ள நோட்டுகள் அனைத்தும் அச்சு மற்றும் காகிதத் தரத்தில் உண்மையான ரூபாய் நோட்டுகளுக்கு ஒத்துப்போவதை அடுத்து அவை உள்நாட்டில் தயாரானதல்ல என்றும், அந்த கள்ள நோட்டுகளை பாகிஸ்தானில் அச்சிட்டு இந்தியாவுக்குள் கொண்டு வந்திருக்கலாம் என்றும் போலீஸôர்

சந்தேகிக்கின்றனர். இதுதொடர்பாக சிபிசிஐடி போலீஸôர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 இதுபோன்ற சர்வதேசப் பிரச்னைகள் தலைதூக்குவது எதிர்காலத்தில் திருப்பூரின்  தொழில் நிலையையே கேள்விக்குறியாக்கிவிடும். குற்றச் செயல்கள் புரிவோரிடமிருந்து  திருப்பூரை பாதுகாக்க  மத்திய, மாநில அரசுகள் குறிப்பாக உள்துறை அமைச்சகம்  கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்பதே அனைத்துத் தரப்பு மக்களின் எதிர்பார்ப்பு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com