தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

வேலைவாய்ப்பு அலுவலகத்தில் குவியும் மனுக்கள்: முடங்கிக் கிடக்கும் ஆன்லைன் சேவை உயிர் பெறுமா?

சென்னை : தமிழகத்தில் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் ஆன்லைன் முறையில் பதிவு செய்யும் சேவை கடந்த 85 நாள்களாக முடங்கிக் கிடக்கிறது. இதனால், வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு கோரி 25 லட்சத்துக்கும் மேற்பட்ட மன

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 3:43 pm

ச. குமரன்

சென்னை : தமிழகத்தில் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் ஆன்லைன் முறையில் பதிவு செய்யும் சேவை கடந்த 85 நாள்களாக முடங்கிக் கிடக்கிறது. இதனால், வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு கோரி 25 லட்சத்துக்கும் மேற்பட்ட மனுக்கள் குவிந்துள்ளன.

÷மின் ஆளுமை மயமாக்கும் திட்டத்தின் கீழ் தமிழகம் முழுவதும் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு, புதுப்பித்தல் மற்றும் கூடுதல் கல்வித் தகுதியை பதிவு செய்தல் ஆகியவற்றை ஆன்லைன் சேவையாக மாற்ற அரசு அனுமதித்தது.

÷இதையடுத்து எல்காட் நிறுவனம் சென்னையைச் சேர்ந்த எமர்ஜெஸ் என்ற நிறுவனத்துடன் இணைந்து எம்பவர் எனப்படும் சிறப்பு மென்பொருள் (சாஃப்ட்வேர்) உதவியுடன் இந்தத் திட்டப் பணிகள் ரூ.2.75 கோடியில் மேற்கொள்ளப்பட்டன.

÷இதையடுத்து, வேலைவாய்ப்புத் துறையில் ஏற்கெனவே நடைமுறையில் இருந்த மென்பொருள்கள் முடக்கப்பட்டன. ஆனால், தொழில்நுட்ப ரீதியாக முழுமையாக   சோதனை செய்யாமலேயே அவசரகதியில் எம்பவர் என்ற மென்பொருள் செயல்படுத்தப்பட்டது. இதற்காக கடந்த செப்டம்பர் 1-ம் தேதி முதல் வேலைவாய்ப்பு அலவலகங்களில் பதிவு உள்ளிட்ட சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து,அண்ணா பிறந்த நாளான கடந்த செப்டம்பர் 15-ம் தேதி முதல் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் இணையதளம் மூலம் ஆன்லைன் பதிவு சேவை தொடங்கி வைக்கப்பட்டது.

÷ஆனால், இந்தச் சேவை சில மணி நேரத்திலேயே செயல்படாமல் முடங்கியது. 85 நாள்களாகியும், இந்த ஆன்லைன் சேவை இதுவரை உயிர் பெறவில்லை. இதுகுறித்து வேலைவாய்ப்புத் துறை தொடர்ந்து மெüனம் காத்து வருகிறது.

÷இந்த நிலையில், ஆன்லைன் சேவை சீராக செயல்படுவது தொடர்பாக எவ்வித தகவலும்  இல்லை. மாவட்ட வாரியாக வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு விவரங்களை இணையதளத்தில் "அப்லோடு' செய்யும் பணி மட்டுமே இப்போது நடைபெறுவதாகத் தெரியவந்துள்ளது.

÷எனினும், இதுகுறித்து அரசு உறுதியான முடிவு எதையும் எடுக்கவில்லை என்பதால்  வேலைவாய்ப்பு அலுவலகங்கள் சீராக செயல்படுவதில் கடும் தேக்க நிலை நீடிக்கிறது. இதனால், வேலைவாய்ப்புத் துறை மீதான நம்பகத்தன்மை பாதிக்கப்பட்டுள்ளது.

÷இதைத் தொடர்ந்து, தினமும் ஏராளமான இளைஞர்கள் தகவல் அறியும் உரிமை  சட்டத்தின் கீழ், வேலைவாய்ப்பு அலுவலகங்களில் தங்களது பதிவு நிலவரம் குறித்து அறிய மனுக்களை அனுப்பி வருகின்றனர்.

÷இதில் பெரும்பாலான மனுக்களுக்கு, தொழில்நுட்பப் பிரச்னை காரணமாக ஆன்லைன்  பதிவு சேவையில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக வேலைவாய்ப்புத் துறை சார்பில் பதில் அளிக்கப்படுகிறது.

÷இந்த பிரச்னையில் அரசு மற்றும் வேலைவாய்ப்புத் துறையின் மெüனம் இனியாவது கலையுமா?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.