சிவகாசி, : சமச்சீர் கல்வி பாட நூல்கள் அச்சிடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால், குறிப்பிட்ட காலத்துக்குள் நூல்கள் அச்சடிக்கும் பணி முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
தமிழ்நாடு பாட நூல் நிறுவனம் நடப்பு ஆண்டில் முதல் வகுப்பு மற்றும் ஆறாம் வகுப்பு மாணவர்களுக்கு சமச்சீர் கல்வி பாடத் திட்டத்தை அறிமுகப்படுத்தியது.
இந்த வகுப்புகளுக்கான நூல்களை அச்சிட காகிதம் மற்றும் காகித அட்டையை தமிழ்நாடு பாட நூல் நிறுவனம் வழங்கிவிடும். பின்னர் கூலி ஒப்பந்த முறையில் நூல் அச்சிடப்பட்டு, பாடநூல் கழகத்திடம் ஒப்படைக்கப்படும்.
நடப்பு ஆண்டுக்கான முதல் மற்றும் ஆறாம் வகுப்புகளுக்கான சமச்சீர் கல்வி பாடத் திட்ட நூல்கள் சிவகாசியில் அச்சடிக்கப்பட்டன.
வரும் கல்வியாண்டில், 2, 3. 4, 5, 7, 8. 9. 10-ம் வகுப்புகளுக்கான சமச்சீர் கல்வி பாடத் திட்ட நூல்களை அச்சடித்து நடைமுறைக்குக் கொண்டு வர அரசு முடிவு எடுத்துள்ளது.
இதையடுத்து, மேற்கண்ட வகுப்புகளுக்கான பாடத் திட்டங்கள் தயாரிக்கப்பட்டு விட்டன. கூலி ஒப்பந்த முறையில் சிவகாசியில் உள்ள சில அச்சகங்களில் நூல்கள் அச்சடிக்க ஒப்பந்தமும் செய்யப்பட்டுவிட்டன.
வழக்கமாக அச்சடிக்கத் தேவைப்படும் காகிதங்களை தமிழ்நாடு பாட நூல் கழகம், ஒப்பந்தம் பெற்றுள்ள அச்சகங்களுக்கு நேரடியாக அனுப்பி வைப்பார்களாம்.
பின்னர், அச்சகத்தார் நூல்ளை அச்சிட்டு, தமிழ்நாடு பாட நூல் நிறுவனத்திடம் ஒப்படைப்பர்.
ஆனால், இப்போது, வரும் கல்வி ஆண்டுக்கு நூல்கள் அச்சடிக்க ஒப்பந்தம் பெற்றுள்ள அச்சகங்களுக்கு, அச்சுக் காகிதங்களை நேரடியாக அனுப்பாமல், சிவகாசி சாட்சியாபுரத்தில் உள்ள தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் குடோனில் வைத்துள்ளனராம்.
அச்சகத்தார் சென்று அந்த குடோனில் இருந்து காகிதங்களை அச்சகத்துக்கு எடுத்து வந்தால், லாரி வாடகை, தொழிலாளர்களுக்குக் கூலியை யார் கொடுப்பது என்ற பிரச்னை எழுந்துள்ளது. எனவே, அச்சகத்தார் கடந்த ஒருவார காலமாக காகிதங்களை குடோனில் இருந்து எடுக்காமல் உள்ளனர்.
இதனால் உரிய நேரத்தில் புத்தகங்கள் அச்சிடப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதுகுறித்து நூல்கள் அச்சிட ஒப்பந்தம் பெற்றுள்ள சபையர் பிரிண்டோகிராப் அச்சகத்தின் பங்குதார்களில் ஒருவரான ஏ. ஞானசேகரன் கூறியதாவது:
வழக்கமாக புத்தகங்கள் அச்சிட அச்சகத்துக்கு நேரடியாக காகிதம் அனுப்பப்படும்.
ஆனால், இப்போது தமிழ்நாடு பாட நூல் கழக குடோனில் அச்சுக் காகிதம் இறக்கிவைக்கப்பட்டுள்ளது. நூல்கள் அச்சிட குறைந்த அளவு கூலியைப் பெற்று வருகிறோம்.
இந்த நிலையில், லாரி மூலம் காகிதங்களை ஏற்றி, அச்சகத்துக்குக் கொண்டுவந்து இறக்கி வைக்க ஆகும் செலவை யார் ஏற்றுக் கொள்வது என்ற பிரச்னை ஏற்பட்டுள்ளது.
ஒவ்வொரு அச்சகத்துக்கும் சுமார் 40 அல்லது 50 டன் காகிதம் தேவைப்படும். இதனால் கடந்த ஒரு வார காலமாக பாட நூல் கழக குடோனில் காகிதம் உள்ளது. இப் பிரச்னை குறித்து கல்வித் துறை அமைச்சர் அளவில் பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. பேச்சுவார்த்தை முடிந்ததும் அச்சுப் பணி துவங்கும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சமயபுரம் மாரியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 1.27 கோடி

மழையூரில் நாம் தமிழா் கட்சி பிரசார வாகனம் தீக்கிரை

பெண்களுக்கான இட ஒதுக்கீட்டை முதலில் நிறைவேற்றியவா் ஸ்டாலின்: கி. வீரமணி

விடுபட்ட பணிகள் தொடர வாக்களியுங்கள்: அமைச்சா் கோவி. செழியன் பிரசாரம்
வீடியோக்கள்

#tnelections2026 | பெண்கள் வாக்கு யாருக்கு? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நேர்காணல் | BJP | DMK | TVK
தினமணி செய்திச் சேவை

தமிழ்நாட்டை மீண்டும் ஆளத் தகுதி படைத்த MK Stalin! | kamal வெளியிட்ட விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

