எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

பழுதடைந்த நிலையில் தேத்துறை ஏரிக்கரை சாலை

வந்தவாசி: வந்தவாசி அருகே மிகவும் மோசமாக பழுதடைந்துள்ள தேத்துறை ஏரிக்கரை சாலை விபத்து ஏற்படும் முன் சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை எழுப்பியுள்ளனர்.  வந்தவாசி-காஞ்சிபுரம் நெட

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 4:28 pm

கணேஷ்கிரி

வந்தவாசி: வந்தவாசி அருகே மிகவும் மோசமாக பழுதடைந்துள்ள தேத்துறை ஏரிக்கரை சாலை விபத்து ஏற்படும் முன் சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை எழுப்பியுள்ளனர்.

 வந்தவாசி-காஞ்சிபுரம் நெடுஞ்சாலையில் வந்தவாசியிலிருந்து சுமார் 11 கி.மீ. தூரத்தில் உள்ளது தேத்துறை கிராமம். இந்த கிராம ஏரியையொட்டி சுமார் 1 கி.மீ. தூரத்துக்கு வந்தவாசி-காஞ்சிபுரம் நெடுஞ்சாலை செல்கிறது.

 வந்தவாசி, திண்டிவனம், விழுப்புரம், புதுச்சேரி, திருச்சி, மதுரை உள்ளிட்ட ஊர்களிலிருந்து வரும் பஸ்கள், லாரிகள் உள்ளிட்ட வாகனங்கள் இச்சாலை வழியாகவே காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்பூதூர், சென்னை, திருத்தணி, திருப்பதி உள்ளிட்ட ஊர்களுக்கு செல்கின்றன.

 வந்தவாசி-காஞ்சிபுரம் சாலையில் உள்ள பாதிரி, தென்னாங்கூர், வடநாங்கூர், மாலையிட்டான்குப்பம், வீரம்பாக்கம், மேல்மா, நெடுங்கல், மானாம்பதி கூட்டுச்சாலை, பெருநகர், உக்கல், மாமண்டூர், தூசி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் இச்சாலையை அதிகம் பயன்படுத்துகின்றனர்.

 இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஒருவழிச்சாலையாக இருந்த இச்சாலை, இரட்டைவழிச் சாலையாக அகலப்படுத்தப்பட்டது. அப்போது தேத்துறை ஏரிக்கரை மீதுள்ள சாலையும் அகலப்படுத்தப்பட்டது.

 ஆனால் ஏரிக்கரை மீது அகலப்படுத்தப்பட்ட பகுதி மட்டும் அடிக்கடி சேதமடைந்து வருகிறது. இதனால் எப்போதும் இப்பகுதி குண்டும், குழியுமாகவே காட்சியளிக்கிறது.

 இதனால் காஞ்சிபுரத்திலிருந்து வந்தவாசி நோக்கி செல்லும் வாகனங்கள் ஏரிக்கரை மீதுள்ள சாலையில் செல்லும்போது குண்டும், குழியும் உள்ள இடங்களைக் கடக்கும்போது பாதைமாறி செல்வதால், எதிரே வரும் வாகனங்கள் மீது மோதும் நிலை ஏற்படுகிறது.

 கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இப்பகுதியில் நடந்த விபத்தில் அரசு பஸ் ஒன்று ஏரியினுள் கவிழ்ந்தது. இரு ஆண்டுகளுக்கு முன் நடந்த விபத்தில் கார் ஒன்றும் கவிழ்ந்தது.

 எனவே ஏரிக்கரை மீதுள்ள சாலையை பலப்படுத்துவதோடு, சாலையோரம் பலமான தடுப்புச் சுவரும் அமைத்தால் மட்டுமே இப்பகுதியில் அடிக்கடி நடைபெறும் விபத்துகளை தடுக்க முடியும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.