உத்தேசமாக, அரசுப் பள்ளி தலைமை ஆசிரியருக்கு மாதச் சம்பளம் 31,950, அதே தனியார் பள்ளி தலைமை ஆசிரியருக்கு 5 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரை வழங்கப்படுகிறது. அரசுப்பள்ளி முதுகலை ஆசிரியருக்கு 21,135-ம், தனியார் பள்ளி முதுகலை ஆசிரியருக்கு 4 ஆயிரம் முதல் 7 ஆயிரம் வரையும், அரசுப் பள்ளி பட்டதாரி ஆசிரியருக்கு 20,725-ம், தனியார் பள்ளி பட்டதாரி ஆசிரியருக்கு 3 ஆயிரம் முதல் 5 ஆயிரம் வரையும், அரசுப் பள்ளி இடைநிலை ஆசிரியருக்கு 12,060-ம், தனியார் பள்ளி இடைநிலை ஆசிரியர்களுக்கு 2 ஆயிரம் முதல் 4 ஆயிரம் வரையும் வழங்கப்படுகிறது.