போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

ஊணிகள் மூலம் நீர்ப்பாசனம்...

சிதம்பரம்: தமிழக கிராமங்களில் மின்வெட்டு பிரச்னை கடுமையாக உள்ளது. மறுபுறம் டீசல் கொண்டு இயங்கும் மோட்டாரின் பயன்பாட்டினால் வேளாண்மைக்கு அதிகளவு உற்பத்திச் செலவுகள் ஏற்பட்டு லாபம் இல்லாமல் போய்விடுகிறத

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 5:11 pm

ஜி.சுந்தரராஜன்

சிதம்பரம்: தமிழக கிராமங்களில் மின்வெட்டு பிரச்னை கடுமையாக உள்ளது. மறுபுறம் டீசல் கொண்டு இயங்கும் மோட்டாரின் பயன்பாட்டினால் வேளாண்மைக்கு அதிகளவு உற்பத்திச் செலவுகள் ஏற்பட்டு லாபம் இல்லாமல் போய்விடுகிறது.

÷இத்தகைய நடைமுறை சூழலில் சிறு மற்றும் குறு விவசாயிகள் பொருளாதார நலன்களை பாதுகாக்கவும, குறைந்த செலவில் வேளாண் பணிகளை திறன்பட மேற்கொண்டு அதிகளவு லாபம் பெற, பாரம்பரிய ஊணிகள் வாயிலாக நீர்ப்பாசனம் பெரிதும் உதவி செய்கிறது.

÷இது குறித்து அண்ணாமலைப் பல்கலை. வேளாண் புல விரிவுரையாளர் தி.ராஜ்பிரவீன் தெரிவித்தது: வயல்கள் மற்றும் தோட்டங்களில் உள்ள பொது பாசன அமைப்புகளில் அதிகளவு ஊணிகள் பயன்படுத்தப்படுகின்றன.

÷குறிப்பாக மின்சார வசதி இல்லாத கிராமங்கள், அதிகளவு மின்வெட்டு உள்ள கிராமங்களில் பயிர்களுக்கு நீர்ப் பாசனம் செய்ய ஊணிகள் அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது.

÷இந்த பாரம்பரிய நீர்ப்பாசன முறையில் குளங்கள், குட்டைகளில் தேக்கி வைக்கப்படும் தண்ணீர் உயர்ந்த மட்டத்தில் உள்ள வாய்க்கால்களில் ஊணிகளின் துணையோடு பாசனம் செய்யப்படுகிறது.

÷2 அல்லது 3 சிறு விவசாயிகள் சேர்ந்து சவுக்கு கட்டைகள் கொண்டு (படத்தில் உள்ளது போன்று) ஒரு முக்கோண வடிவில் நீர் ஏற்றம் செய்யும் வகையில் குளத்தின் ஒரங்களிலும், வாய்க்கால் அருகிலும் அமைக்க வேண்டும்.

÷பின்னர் 6-8 அடி வரை கொண்ட ஊணியை கயிறுகள் கொண்டு கட்டி நீரை இரைந்து நீர்ப் பாசனம் செய்ய வேண்டும். சோதனை அடிப்படையில் முதலில் நீர்ப் பாசனம் செய்து பார்த்துவிட்டு பின்னர் நீர்ப்பாசனம் செய்யலாம்.

÷மானாவாரி நிலங்கள், தோட்டக்கலை நிலங்களில் உள்ள இளம் பயிர்களை பாதுகாக்கவும், வேளாண் இழப்புகளை தடுக்கவும் ஊணிகள் பெரிதும் உதவி செய்கின்றன. தென் தமிழகத்தில் இரவு நேரங்களில் அல்லது அதிகாலை நேரங்களில் சிறு மற்றும் குறு விவசாயிகள் கூட்டாக சேர்ந்து பொது பாசன அமைப்புகளில் பல ஊணிகளை அமைத்து பாடல்களை பாடி தங்கள் நிலங்களில் சோர்வு இல்லாமல் தண்ணீர் பாசனம் செய்யும் முறை நடைமுறையில் உள்ளது.

÷இப்பாரம்பரிய நீர்ப்பாசன முறை வாயிலாக குறைந்தளவு நீர் பாசனம் உள்ள பொது அமைப்புகளில் பயன்படுத்த வேண்டும் என்ற ஊர் கட்டுப்பாடுகளே தென் மாவட்டங்களில் உள்ள பல பாசன சங்கங்கள், ஊர் பஞ்சாயத்துகளில் உள்ளது.

÷இதன் வாயிலாக குறைந்தளவு தண்ணீரை தங்களின் உழைப்புக்கு ஏற்ப விவசாயிகள் பாசனம் செய்து சாகுபடி பணிகளை மேற்கொள்ள முடியும்.

÷பிறபயன்கள்: குறைந்த செலவில் வேளாண் உற்பத்தி பணிகளை மேற்கொள்ள சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு ஊணிகள் பாசனம் உதவுகிறது. மின்சாரம் இல்லாத சாகுபடி பகுதிகள், அதிகளவு மின்வெட்டு உள்ள விவசாயப் பகுதிகளில் நீர்ப்பாசன தேவையை எளிய தொழில்நுட்பம் கொண்டு சந்திக்க உதவுகிறது.

÷குறைந்தளவு பாசன நீரை ஒருவர் மட்டுமே பயன்படுத்தாமல் ஊரில் உள்ள அனைவரும் பயன்படுத்தி தங்களின் உழைப்புக்கு ஏற்ப பாசனம் செய்ய உதவுகிறது.

சிறு மற்றும் குறு விவசாயிகளிடையே ஒற்றுமையை ஏற்படுத்தச் செய்வதுடன் சுற்றுச்சூழலுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படுத்துவது கிடையாது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.