திண்டுக்கல்:திண்டுக்கல் மாவட்டக் காவல் துறை இணையதளம் மீண்டும் செயல்படுமா? என்று பொதுமக்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த பொதுமக்கள் காவல் துறையினருடன் நட்பு முறையில் இணைந்து செயல்படவும், காவல் நிலையங்களுக்குச் செல்லாமல் குற்றம் மற்றும் குறைகளை உயர் அதிகாரிகள், காவல் நிலையங்களின் நேரடிப் பார்வைக்கு ஆன் லைன் மூலம் கொண்டு செல்லும் வகையிலும் www.dindiguldistri ctpoli என்ற புதிய இணைய தளம் கடந்த ஆகஸ்டு மாதம் 9-ம் தேதி அன்றைய மாவட்டக் காவல் கண்காணிப்பாளராக இருந்த எம்.எஸ். முத்துச்சாமியால் தொடங்கி வைக்கப்பட்டது.
மாவட்ட மக்களின் நண்பனாகவும், காவலனாகவும் காவல் துறையின் சேவை, செயல்பாடுகள் உள்ளன என்பதை அனைவருக்கும் உணர்த்தும் நோக்கிலும், பல்வேறு செய்திகளை உள்ளடக்கியதாகவும் இந்த இணையதளம் வடிவமைக்கப்பட்டிருந்தது.
மேலும் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர், கூடுதல் கண்காணிப்பாளர்கள், துணைக் கண்காணிப்பாளர்கள், மாவட்டம் முழுவதும் உள்ள காவல் நிலையங்கள் என அனைத்து உயர் அதிகாரிகளையும் பொதுமக்கள் நேரடியாகத் தொடர்பு கொள்ளும் வகையில் அவர்களது செல்போன் எண்கள், காவல் நிலையங்களின் தொலைபேசி எண்கள் இதில் இடம் பெற்றுள்ளன.
பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பிப்பவர்கள் காவல் நிலையம் செல்லாமல் இணையதளம் மூலம் போலீஸ் காவல் ஆய்வு நிலையையும்
(டஞகஐஇஉ யஉதஐஊஐஇஅபஐஞச நபஅபமந) இதில் தெரிந்து கொள்ள முடியும்.
இதைத் தவிர குற்றவாளிகள், போக்கிரிகள், தொலைந்து போன நபர்கள் மற்றும் அடையாளம் காண முடியாத நிலையில் இறந்து போனவர்களின் தகவல்கள் புகைப்படத்துடன் வெளியிடப்பட்டுள்ளன.
சாலைப் போக்குவரத்து விதிகள், உதவிக் குறிப்புகள், திருட்டு, கொள்ளை, ஈவ்டீசிங், சைபர் குற்றம், போதை ஆகிய குற்றங்களில் இருந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு அளிக்கும் வகையில் தகவல்களும் இடம் பெற்றுள்ளன.
காவல் துறையின் இந்த சேவையைப் பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற நோக்கில் பணி மாறுதல் உத்தரவு வந்த நிலையிலும் உடனே இந்த இணையதளத்தின் சேவையை அன்றைய காவல் கண்காணிப்பாளர் எம்.எஸ். முத்துச்சாமி தொடங்கி வைத்தார்.
ஆனால் இன்று வரை இது பயன்பாட்டில் இல்லாமல் பணி மாறுதல் பெற்றுச் சென்ற காவல் கண்காணிப்பாளரின் படத்துடன் கூடிய செய்தியும், புது மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஆகஸ்டு மாதம் 13-ம் தேதி பதவி ஏற்பார் என்ற தகவலையும் கொண்டு செயல்பாடு இல்லாமல் உள்ளது.
மாவட்ட மக்களின் நண்பனாகவும், காவலனாகவும் காவல் துறை செயல்படும் என்ற நோக்கில் ஏற்படுத்தப்பட்ட இணையதளம் அதன் நோக்கத்தை இழந்து வருகிறது.
மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் இந்த இணையதளத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என்பது இணையதளத்தைப் பயன்படுத்துவோரின் கோரிக்கையாகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அமைதி, தெளிவை எட்ட தியானம் உதவும்: குடியரசு துணைத் தலைவா் சி.பி. ராதாகிருஷ்ணன்

ரயில் நீா் ஊழல்: ஆா்டிஐ விண்ணப்பத்தை மறுபரிசீலனை செய்ய ஐஆா்சிடிசிக்கு உத்தரவு!

குன்றத்தூா் நகராட்சியில் அதிமுக வேட்பாளா் பிரசாரம்
மதுப் புட்டியால் ஒருவரை தாக்கி காயப்படுத்தியவா் கைது
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை


