மோஜ்தபா கமேனி உயிருடன் இருக்கிறார் - அமெரிக்காதிவிஷா சர்மா வழக்கு: கணவர், மாமியாருக்கு 14 நாள்கள் நீதிமன்றக் காவல்! தமிழகத்தில் மேலும் சில ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்மகாராஷ்டிரத்தில் ரூ. 2 லட்சம் வரையிலான பயிர்க்கடன் தள்ளுபடிபுதிய ஆட்சி அமைந்த பிறகு சட்டம் - ஒழுங்கு பிரச்னைக்கு திமுக எப்படி காரணமாகும்? ஆ. இராசா கேள்விசிபிஎஸ்இ தலைவர், செயலர் மாற்றம்!சிபிஎஸ்இ விடைத்தாள் மறுமதிப்பீடு: சைபர் தாக்குதலுக்குப் பின் சீரான தளத்தில் 16,000-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்
/

விலைவாசி உயர்வால் திமுக ஆட்சியை இழக்கும்: பழ. கருப்பையா

கோவை, பிப். 16: விலைவாசி உயர்வால் திமுக ஆட்சியை இழக்கும் என்றார் அதிமுக கொள்கை பரப்பு இணைச் செயலாளர் பழ.கருப்பையா.  வரும் சட்டப் பேரவைத் தேர்தலே திமுகவுக்கு இறுதித் தேர்தலாக இருக்கும் என்றும் அவர் குற

Updated On :20 செப்டம்பர் 2012, 6:57 am IST

கோவை, பிப். 16: விலைவாசி உயர்வால் திமுக ஆட்சியை இழக்கும் என்றார் அதிமுக கொள்கை பரப்பு இணைச் செயலாளர் பழ.கருப்பையா.

 வரும் சட்டப் பேரவைத் தேர்தலே திமுகவுக்கு இறுதித் தேர்தலாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

 ÷திமுக ஆட்சியின் மக்கள் விரோதப் போக்கைக் கண்டித்து கோவை மாநகர அதிமுக சார்பில் புதன்கிழமை நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் அவர் மேலும் பேசியது: கருணாநிதி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஜனநாயகம் கை நழுவிப் போய்விடும். தமிழகத்தில் ஜனநாயகத்தை காப்பாற்றும் கடைசி நம்பிக்கையாக இருப்பவர் ஜெயலலிதா தான்.

 மீனவர்கள் 106 பேர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டதற்கு கனிமொழி தலைமையில் திமுக ஆர்ப்பாட்டம் நடத்தியிருக்கிறது. மத்தியில் ஆளும் கூட்டணியில் இருக்கும் திமுக, ஆர்ப்பாட்டம் நடத்துவதை மக்கள் கேலி செய்கின்றனர் என்றார்.

 அதிமுக மாநிலத் தேர்தல் பிரிவு செயலர் பொள்ளாச்சி வி.ஜெயராமன் பேசியது: தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சியில் ஆலை அதிபர்கள், கோடீஸ்வரர்கள் மட்டும் எம்எல்ஏ-க்களாக வர முடியும் என்ற நிலை இருந்த காலத்தில் 1967ல் அண்ணா தமிழகத்துக்கு சுதந்திரம் பெற்றுத் தந்தார்.

 பின்னர் எம்ஜிஆர் கடுமையாக உழைத்து கருணாநிதியிடமிருந்து தமிழகத்தை மீட்டு, மக்களுக்கு சுதந்திரம் பெற்றுத் தந்தார். இப்போது தமிழகத்தை காப்பாற்றும் பொறுப்பை ஜெயலலிதா ஏற்றுக் கொண்டிருக்கிறார் என்றார்.

 ÷நடிகர் ராதாரவி, கோவை மாநகர அதிமுக செயலாளர் எம்.எல்.ஏ. தா.மலரவன், புறநகர் மாவட்ட அதிமுக செயலாளர் எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டோர் பேசினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.