

காஞ்சிபுரம், ஜன. 8: அன்னை தெரசா சிறப்பு ரயில் சனிக்கிழமை காஞ்சிபுரம் வந்தது.
15 ஆயிரம் மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் இந்த ரயிலில் இருந்த கண்காட்சியை பார்வையிட்டனர்.
அன்னை தெரசாவின் நூற்றாண்டு விழாவையொட்டி அவரது சேவைகளை மக்களுக்கு விளக்கும் வகையில் கண்காட்சி ரயில் ஒன்று ரயில்வே துறை மூலம் விடப்பட்டது. இந்த ரயில் ஆகஸ்டு 26-ம் தேதி கொல்கத்தாவில் இருந்து கிளம்பியது. நாடு முழுவதும் பல்வேறு நகரங்கள் வழியாக சுற்றி வந்த இந்த ரயில் ஜன 6 மற்றும் 7-ம் தேதி காட்பாடி பகுதிக்கு வந்தது.
அங்கிருந்து புறப்பட்டு சனிக்கிழமை அதிகாலை 1 மணிக்கு காஞ்சிபுரம் வந்தது. இந்த ரயிலில் இருக்கும் கண்காட்சி தொடக்க விழா காஞ்சிபுரம் பழைய ரயில் நிலையத்தில் நடைபெற்றது. இவ் விழாவுக்கு தென்னக ரயில்வேயின் சென்னை கோட்ட மேலாளர் அனந்தராமன் தலைமை தாங்கினார். காஞ்சிபுரம் எம்எல்ஏ சக்தி கமலாம்பாள் விளக்கேற்றி வைத்தார். கூடுதல் கோட்ட மேலாளர் ராஜேந்திரன்
உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மூன்று ஏ.சி. ரயில் பெட்டிகளில் அன்னை தெராசாவின் வாழ்க்கை வரலாறு தொடர்பான ஆவணப்படங்கள், அவரது இளம் வயது படங்கள், அவர் நடத்தும் நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு படங்கள் வைக்கப்பட்டிருந்தன. காலை 10 மணி முதல் மாணவர்கள், மற்றும் பொதுமக்கள் இந்த கண்காட்சியை பார்வையிட அனுமதிக்கப்பட்டனர். இரவு 7 மணிவரை தொடர்ச்சியாக மாணவ, மாணவிகள் பொதுமக்கள் பார்வையிட்டனர். 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்த ரயில் படக் கண்காட்சியை பார்த்ததாகவும், சனிக்கிழமை இரவே இந்த ரயில் சென்னை புறப்பட்டு செல்வதாகவும் ரயில்வே மேலாளர் வெங்கடாச்சாரி தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.