நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

மாட்டுத் தொழுவமாக மாறிய சிறுவர் பூங்கா

சிதம்பரம், நவ.15: கடலூர் மாவட்டம் சிதம்பரம் நகரில் 6 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட சிறுவர் பூங்கா மாட்டுத் தொழுவமாக மாறியுள்ளது. சுற்றுலா மேம்பாட்டு திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட இப்பூங்கா பயன்பாடின்

News image
Updated On :19 செப்டம்பர் 2012, 11:26 pm

ஜி.சுந்தரராஜன்

சிதம்பரம், நவ.15: கடலூர் மாவட்டம் சிதம்பரம் நகரில் 6 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட சிறுவர் பூங்கா மாட்டுத் தொழுவமாக மாறியுள்ளது.

சுற்றுலா மேம்பாட்டு திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட இப்பூங்கா பயன்பாடின்றி பாழாகி வருகிறது. சிதம்பரம் மன்மதசாமி நகரில் நகராட்சி சார்பில் ஆதிசங்கரா சுற்றுலா சர்க்கியூட் திட்டத்தின் கீழ் ரூ.3.50 லட்சம் செலவில் 6 ஆண்டுகளுக்கு முன்பு சிறுவர் பூங்கா அமைக்கப்பட்டது. நகராட்சித் தலைவராக இருந்த எம்எஸ்என்.குமார் இதனை அமைக்க ஏற்பாடு செய்தார்.

இப்போது போதிய பராமரிப்பு இல்லாததால் சிறுவர்கள் இந்தப் பூங்காவை பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. பூங்கா நுழைவாயில் மாடுகள் கட்டப்பட்டு மாட்டுத் தொழுவமாக மாறி உள்ளது. பூங்காவின் உள்ளே கயிறு கட்டி, அப்பகுதியினர் துணிகளை உலரவைத்து வருகின்றனர். எனவே நகராட்சி நிர்வாகம் பூங்காவை பராமரித்து சிறுவர் பயன்படுத்தும் வகையில் சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.