முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சி.டி. கோபிநாத் 96 வயதில் காலமானார்!புதுவையில் வரலாறு காணாத வாக்குப் பதிவு!ஏப்ரல் 17 முதல் கோடை விடுமுறை!பங்குச்சந்தை வீழ்ச்சி! 900 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ்!!திட்டங்கள் இருக்கும் வரை ஸ்டாலின்தான் தமிழ்நாட்டை ஆள்வான்! - முதல்வர் ஸ்டாலின்புதுவையில் வரலாறு காணாத வாக்குப் பதிவு!தமிழ்நாட்டின் வளர்ச்சியை திமுக விரும்பவில்லை: பியூஷ் கோயல்!வேட்பாளரைத் திரும்பப் பெற்ற காங்கிரஸ்! சுநேத்ரா பவார் வெற்றி உறுதி?
/

போதிய ஆசிரியர்கள் இல்லாத நாச்சிக்குளம் பள்ளி

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம், நாச்சிக்குளம் கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் முக்கிய பாடங்களுக்கு ஆசிரியர்கள் இல்லாத நிலையில், அரசுப் பொதுத் தேர்வை சந்திக்கவுள்ளனர்.  திருத்துற

Updated On :19 செப்டம்பர் 2012, 11:37 pm

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம், நாச்சிக்குளம் கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் முக்கிய பாடங்களுக்கு ஆசிரியர்கள் இல்லாத நிலையில், அரசுப் பொதுத் தேர்வை சந்திக்கவுள்ளனர்.

 திருத்துறைப்பூண்டி வட்டம், நாச்சிக்குளம் கிராமத்தில் அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் உதயமார்த்தாண்டபுரம், நாச்சிக்குளம், வடக்குபள்ளியமேடு, உப்பூர், கோபாலசமுத்திரம், செறுபனையூர், கும்மட்டித்திடல், பின்னத்தூர், ஆறுகாட்டுவெளி, தோலி உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த ஏறத்தாழ 700 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர்.

 இந்தப் பள்ளியில் 20 ஆசிரியர்கள் பணியிடங்கள் உள்ளன. ஆனால், இப்போது 6 பேர் மட்டுமே பணியில் உள்ளனர். பெற்றோர் - ஆசிரியர் கழகத்தின் மூலம் 6 பேரைப் பணியமர்த்தி பள்ளி இயங்கி

 வருகிறது.

 ஆனால், பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்குரிய முதுநிலை ஆசிரியர்கள் போதிய அளவில் இல்லை. இதில், குறிப்பாக ஆங்கிலம், வேதியியல், உயிரியல், இயற்பியல், கணிதம், கணினி அறிவியல் ஆகிய முக்கியப் பாடங்களுக்கு ஆசிரியர்கள் இல்லை. பட்டதாரி ஆசிரியர்கள் பிரிவில் ஆங்கிலம், சமூக அறிவியல் தலா 2, கணிதம், அறிவியல், உடல்கல்வி ஆகிய பிரிவுகளிலும் ஆசிரியர் பணியிடங்கள் காலியாகவே உள்ளன. நிர்வாகப் பிரிவிலும் உதவியாளர், அலுவலக உதவியாளர், காவலர் ஆகிய பணியிடங்களும் காலியாகவே உள்ளன.

 நாச்சிக்குளத்தைச் சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள 9 தொடக்கப் பள்ளிகளிலிருந்து தேர்ச்சி பெற்று வரும் மாணவ, மாணவிகளுக்கு இந்தப் பள்ளிதான் உயர் மற்றும் மேல்நிலைக் கல்வியை வழங்கி வருகிறது. ஆனால், கடந்த இரு ஆண்டுகளாக தொடர்ந்து ஆசிரியர்கள் பணியிடம் முழு அளவில் நிரப்பப்படாததால், மாணவ, மாணவிகள் பெரும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். இதனால், இந்தப் பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது.

 இதுகுறித்து இந்தப் பள்ளியின் பெற்றோர் - ஆசிரியர்கள் கழகத் தலைவர் ஜெ. தாஹீர் கூறியது:

 ஆசிரியர்கள் இடமாறுதல் கலந்தாய்வில் இந்தப் பள்ளியில் பணியாற்றி வந்த 6 ஆசிரியர்கள் பணியிட மாறுதல் பெற்று, வெளியிடங்களுக்குச் சென்று விட்டனர். வெளியூர்களிலிருந்து இந்தப் பள்ளிக்கு நியமிக்கப்படும் ஆசிரியர்கள் தங்களது செல்வாக்கைப் பயன்படுத்தி எவ்வளவு விரைவாக மாறுதல் பெற முடியுமோ, அவ்வளவு விரைவாக மாறுதல் பெற்றுச் சென்று

 விடுகின்றனர்.

 அண்மையில் நடைபெற்ற தலைமையாசிரியர்கள் மாறுதல் கலந்தாய்வில் இந்தப் பள்ளியில் இருந்த தலைமையாசிரியரும் மாறுதல் பெற்றுச் சென்றுவிட்டார்.

 மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, பெற்றோர் - ஆசிரியர் கழகம் மூலம் 6 ஆசிரியர்களை நியமித்து, அவர்களுக்கு ஊதியத்தை வழங்கி வருகிறோம்.

 ஆனால், இந்தப் பகுதியில் மேல்நிலைக் கல்வி பயிலும் மாணவர்களுக்கு வகுப்பு எடுக்கக் கூடிய அளவுக்கு தகுதிபடைத்த முதுநிலைப் பட்டதாரிகள் கிடைக்கவில்லை. இதனால், மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுகிறது என்றார்  அவர்.

 எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ் 2 அரசுப் பொதுத் தேர்வுகளில் பெறும் மதிப்பெண்கள்தான் மாணவ, மாணவிகளின் எதிர்காலத்தை நிர்ணயிக்கின்றன என்பதைக் கருத்தில் கொண்டு, அரசு விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு, இந்தப் பள்ளிக்கு தேவையான எண்ணிக்கையில் ஆசிரியர்களை நியமித்து, மாணவர்களின் நலனைப் பாதுகாக்க வேண்டும் என்பதுதான் இங்குள்ள மக்களின் எதிர்பார்ப்பு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.