நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவிக்கும் சிதம்பரம்

சிதம்பரம், செப்.4: சிதம்பரம் நகரில் போக்குவரத்து பிரிவு காவல் நிலையம் தொடங்கிய பின்னரும் போக்குவரத்து நெரிசல் தொடர்வதால் பொதுமக்கள், குறிப்பாக மாணவ, மாணவியர்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். சிதம்பரம

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 12:14 am

ஜி.சுந்தரராஜன்

சிதம்பரம், செப்.4: சிதம்பரம் நகரில் போக்குவரத்து பிரிவு காவல் நிலையம் தொடங்கிய பின்னரும் போக்குவரத்து நெரிசல் தொடர்வதால் பொதுமக்கள், குறிப்பாக மாணவ, மாணவியர்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு தினந்தோறும் நூற்றுக்கணக்கான வாகனங்களில் வெளியூரிலிருந்து சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். மேலும் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பயிலும் சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் அதிக அளவு இருசக்கர வாகனங்களையும், பேராசிரியர்கள், மருத்துவர்கள் அதிக அளவு கார்களை பயன்படுத்துவதாலும் சிதம்பரம் நகரில் காலை, மாலை இருவேளையும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு மக்கள் நடந்தோ அல்லது வாகனங்களில் செல்லவோ கடும் அவதியுறும் நிலை உள்ளது.

குறிப்பாக பஸ்நிலையம், காந்திசிலை, போல்நாராயணன்தெரு, கீழரதவீதி. மேலரதவீதி, பச்சையப்பன் பள்ளி சந்திப்பு. கீழ வீதி, தெற்கு வீதி சந்திப்பு பகுதியில் தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது.

இந்த போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த போதிய போலீஸôர் கிடையாது. மேலும் நகரில் உள்ள பல சிக்னல்கள் இயங்கவில்லை. தற்போது சிதம்பரம் நகரில் போக்குவரத்து காவல் பிரிவு தொடங்கப்பட்டு இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் கூடுதல் போலீஸôர் நியமிக்கப்பட்டுள்ளனர். இருப்பினும் போக்குவரத்து நெருக்கடியை கட்டுப்பாட்டிற்கு கொண்டு வர இயலவில்லை. நகரில் ஓருவழிப்பாதையை யாரும் கடைபிடிப்பதில்லை. குறிப்பாக ஆட்டோ, மினி டோர் லாரிகள் ஒருவழிப்பாதையை கடைபிடிப்பதில்லை. இதுகுறித்து மக்கள் புகார் அளித்தும் போலீஸôரும் அவர்களை கண்டுகொள்வதில்லை. மினிபஸ்கள் சாலையின் நடுவிலேயே ஆங்காங்கே நிறுத்தி மக்களை ஏற்றி இறக்குவதால் போக்குவரத்து அடிக்கடி ஸ்தம்பித்து விடுகிறது.

நடராஜர் கோயிலுக்கு சுற்றுலாப் பயணிகள் வரும் வாகனங்கள் கீழரதவீதியில் சாலையிலேயே நிறுத்தப்படுவதால் காலை, மாலை இருவேளையும் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. சென்னை, புதுச்சேரி, கடலூரிலிருந்து, நெய்வேலிலியிருந்து சிதம்பரம் வழியாக சீர்காழி, மயிலாடுதுறை, காரைக்கால், நாகப்பட்டினம் செல்லும் வாகனங்கள் ஒருவழிப்பாதையான போல்நாராயணன்தெரு வழியாக நகரை கடந்து செல்கின்றன.

இச்சாலையில் ஹோட்டலுக்கு வருபவர்கள் இருபுறமும் கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்களை நிறுத்திவிட்டு செல்வதால் அடிக்கடி போக்குவரத்து ஸ்தம்பித்து நீண்ட தூரம் செல்லும் பேருந்துகள் நகரை கடக்க பெரும் அவதிக்குள்ளாகின்றனர்.

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திலிருந்து சிதம்பரத்திற்கு வருபவர்கள் போல்நாராயணன்தெரு வழியாக கடந்துதான் நகருக்கு வந்து செல்ககின்றனர். இச்சாலையில் வாகனங்களை நிறுத்த போலீஸôர் தடை விதிக்க வேண்டும் என பொதுமக்களின் கோரிக்கையாகும். போக்குவரத்து நெருக்கடியினால் பள்ளிக்கு செல்லும் மாணவ, மாணவியர்கள், வேலைக்கு செல்லும் ஊழியர்கள் குறிப்பிட்ட நேரத்திற்கு பள்ளிக்கோ, வேலைக்கோ செல்ல முடியாமல் அவதியுறுகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.