எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

வந்தவாசி: பயன்பாட்டுக்கு வராத புதிய பஸ் நிலையம்!

வந்தவாசி: அணுகுசாலை அமைக்கும் பணி தாமதமாகி வருவதால் சுமார் ரூ.5 கோடி மதிப்பிலான வந்தவாசி புதிய பஸ் நிலையம் பயன்பாட்டுக்கு வராமல் உள்ளது.  தமிழ்நாடு நகர்ப்புற வளர்ச்சித் திட்டத்தின் கீழ் ரூ.2.65 கோடி க

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 12:30 am

கணேஷ்கிரி

வந்தவாசி: அணுகுசாலை அமைக்கும் பணி தாமதமாகி வருவதால் சுமார் ரூ.5 கோடி மதிப்பிலான வந்தவாசி புதிய பஸ் நிலையம் பயன்பாட்டுக்கு வராமல் உள்ளது.

 தமிழ்நாடு நகர்ப்புற வளர்ச்சித் திட்டத்தின் கீழ் ரூ.2.65 கோடி கடன்பெற்று, நகராட்சி பங்களிப்பாக மீதித்தொகையையும் சேர்த்து சுமார் ரூ.5 கோடியில் காமராஜர் நகர் அருகே இந்த பஸ் நிலையம் கட்டப்பட்டுள்ளது. இதில், 26 பஸ் நிறுத்துமிடங்கள், 31 கடைகள், 2 உணவகங்கள், 2 ஓய்வறைகள் உள்ளிட்டவை கட்டப்பட்டுள்ளன.

 கடந்த 2008-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் பஸ் நிலையத்தின் கட்டுமானப் பணி தொடங்கப்பட்டது. பணிக்காலம் 25 மாதங்கள் ஆகும். ஆனால், அதற்கு 7 மாதங்களுக்குப் பிறகே இந்த பஸ் நிலையம் கட்டி முடிக்கப்பட்டது.இதையடுத்து கடந்த 2010-ம் ஆண்டு அக்டோபர் மாதம் அப்போதைய துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் புதிய பஸ் நிலையத்தைத் திறந்துவைத்தார். இருப்பினும், பஸ் நிலையம் செல்ல அணுகுசாலை அமைக்கப்படாததால், இதை பயன்படுத்த முடியாத நிலை நிலவியது.

 தனியார் நிலத்தைப் பெறுவதில் சிக்கல்!

 இதையடுத்து ரூ.1 கோடி அரசு மானியம் மற்றும் ரூ.1 கோடி நகராட்சி பங்களிப்புடன் மொத்தம் ரூ.2 கோடியில் அணுகுசாலை அமைக்கும் பணி 2011-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கியது. இந்த அணுகுசாலை 910 மீட்டர் நீளமும், 16 மீட்டர் அகலமும் கொண்டதாகும். இதில் சுமார் 300 மீட்டர் நீள நிலம் தனியார் சிலருக்கு சொந்தமானதாகும். இதையடுத்து, அரசு நிர்ணயிக்கும் விலைக்கு நிலத்தை கொடுப்பதாக அவர்களிடமிருந்து ஒப்புதல் கடிதம் பெறப்பட்டு ஒரு சதுர அடிக்கு ரூ.25 விலை நிர்ணயம் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.ஆனால் இந்த விலையை உயர்த்தித் தரவேண்டும் என்று அவர்கள் ஆட்சேபம் தெரிவித்ததால் இதுகுறித்து மறுஆய்வு செய்யக்கோரி மாவட்ட ஆட்சியருக்கு நகராட்சி சார்பில் பிரேரணை அனுப்பப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

 விரைவில் முடிக்க உத்தரவிட்டும்..!

 இதையடுத்து, விலையை மறுநிர்ணயம் செய்யும்வரை தற்காலிகமாக சாலை அமைத்துக்கொள்ள அவர்கள் சிலரிடமிருந்து தாற்காலிக ஒப்புதல் கடிதம் பெறப்பட்டு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது.

 இந்த அணுகுசாலை அமைப்பதற்கான பணிக்காலம் 6 மாதங்கள் ஆகும். ஆனால் பணிக்காலம் முடிந்து ஒரு மாதமாகியும் அணுகுசாலை அமைக்கும் பணியில் பாதியளவுகூட முடியவில்லை.கடந்த ஜூலை மாதம் புதிய பஸ்நிலையத்தை ஆய்வுசெய்த அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, இன்னும் ஒரு மாத காலத்துக்குள் அணுகுசாலை அமைக்கும் பணி முடிக்கப்படவில்லை என்றால் அதற்கான ஒப்பந்தத்தை ரத்து செய்யும்படி நகராட்சி பொறியாளருக்கு உத்தரவிட்டுள்ளதாக நிருபர்களிடம் கூறினார்.

 இருப்பினும், இதுதொடர்பாக எவ்வித முன்னேற்றமும் இல்லை என்கின்றனர் நகர மக்கள்.

 புதிய பஸ் நிலையம் பயன்பாட்டுக்கு வராததால் கடந்த மூன்றரை ஆண்டுகளாகப் பலமுறை நடைபெற்ற பஸ் நிலைய கடைகளுக்கான ஏலத்தில் யாரும் பங்கேற்கவில்லை. மேலும் புதிய பஸ் நிலையத்தினுள் சமூக விரோதச் செயல்கள் நடப்பதாகவும் பொதுமக்கள் புகார் கூறுகின்றனர்.

 எனவே, அணுகுசாலை அமைக்கும் பணியை விரைந்து முடித்து புதிய பஸ் நிலையத்தைப் பயன்பாட்டுக்குக் கொண்டுவர வேண்டும் என்பதே பொதுமக்களின் விருப்பம் ஆகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.