பொன்னேரி, செப். 27: பொன்னேரி புதிய பஸ் நிலையத்தில் பேரூராட்சி சார்பில் அமைக்கப்பட்டுள்ள உயர் கோபுர மின்விளக்கு பழுதாகி ஒரு வாரமாவதால் பஸ் நிலையம் இருளில் மூழ்கிக் கிடக்கிறது. இதனால் பயணிகள் அவதிப்படுகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி புதிய பஸ் நிலையத்தில் சென்னை மாநகரம், விழுப்புரம் கோட்டம் மற்றும் தனியார் பஸ்கள் என நாள்தோறும் 100-க்கும் மேற்பட்டவை வந்து செல்கின்றன.
பொன்னேரியில் கோட்டாட்சியர், வ்ட்டாட்சியர் அலுவலகம் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட அரசு அலுவலகங்கள் உள்ளன. இதனால் பொன்னேரி சுற்றுப்பகுதி கிராம மக்கள் நாள்தோறும் ஏராளமானோர் பல்வேறு அலுவல் காரணமாக பொன்னேரி வந்து செல்கின்றனர்.
பயணிகள் வசதிக்காக கோயில் நகர அபிவிருத்தி திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சத்தில் பஸ் நிலைய நுழைவாயிலில் 2006-ல் உயர் கோபுர மின்விளக்கு அமைக்கப்பட்டது.
கடந்த சனிக்கிழமை இரவு உயர்கோபுர விளக்கின் மின் கம்பிகள் எரிந்து போயின. மின்விளக்கு திடீரென அணைந்ததால் பஸ் நிலையம் இருளில் மூழ்கியது. இதனால் பயணிகள் அவதியுறும் நிலை ஏற்பட்டுள்ளது.
பழுதாகி ஒரு வாரமாகியும் அதை சீர்செய்ய பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை. இந்நிலை தொடர்ந்தால் குற்றச்செயல்கள் நடைபெற இது வழிவகுக்கும்.
எனவே பயணிகள் நலன் கருதி உயர் கோபுர மின் விளக்கை பழுது நீக்க பேரூராட்சி நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் எதிர்ப்பார்ப்பாகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தற்கொலை செய்திருப்பேன்... விஜய்குமார், அவரது மனைவி மீது குற்றம் சுமத்தி விடியோ வெளியிட்ட இளம் நடிகை!

உ.பி: உடற்பயிற்சி கூடத்தில் ஏற்பட்ட தகராறில் 3 பேர் சுட்டுக்கொலை
வாக்குக்கு ரூ. 5,000 கொடுக்கும் திமுக: தவெக குற்றச்சாட்டு

கருப்புடன் வெளியாகும் நூறு சாமி?
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


