கிருஷ்ணகிரி, பிப்.22: கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணத்தை சேர்ந்த எழுத்தாளர் மனோன்மணி (எ) சுகவன முருகனுக்கு முதல் சிற்றிதழ் விருது வழங்கப்பட்டுள்ளது. விருதுடன் ரூ.1.5 லட்சம் ரொக்கம், சான்றிதழ் வழங்கி தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம் கெüரவித்துள்ளது.
காவேரிப்பட்டணம் அருகே உள்ள சவுளூர் நடுநிலைப் பள்ளியில் கணித ஆசிரியராகப் பணியாற்றி வருபவர் சுகவன முருகன். 30 ஆண்டுகளாக கவிதை, கட்டுரைகளை எழுதி வரும் இவர், வரலாற்று ஆய்வாளரும்கூட.
"புது எழுத்து' என்னும் சிற்றிதழை, மனோன்மணி என்ற புனைபெயரில் நடத்தி வருகிறார். மறைந்த மலையாள கவிஞர் ஏ.அய்யப்பனின் கதைத் தொகுப்பை முதலில் தமிழில் கொண்டுவந்தது இவரது புது எழுத்து. தகடூர் என்னும் அரிய வரலாற்று நூலை மீள்பதிப்பு செய்ததும், கிருஷ்ணதேவராயர் காலத்தில் நூனிஸ் என்ற போர்ச்சுகீசிய வியாபாரி தமிழகத்துக்கு வருகை புரிந்ததை பயண நூலக வெளிட்டுள்ளதும் இவரது புது எழுத்து பத்திரிகை. கிருஷ்ணகிரி காசுகள் என்ற வரலாற்று நூல் இவரது முதல் நூலாகும்.
தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம் நடப்பாண்டு முதல் தமிழ் இலக்கியத்துக்கு வளம் சேர்க்கும் சிற்றிதழுக்கான விருதை ஏற்படுத்தியுள்ளது. இது ரூ.1.5 லட்சம் ரொக்கப் பரிசும், பாராட்டு பத்திரமும் அடங்கியது.
நோபல் பரிசு பெற்ற "ஒரு நூற்றாண்டு காலத்தனிமை' என்னும் நாவல், தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு புது எழுத்து சிற்றிதழில் தொடராக வெளிவந்து கொண்டிருக்கிறது. இப்பணியைப் பாராட்டி சிற்றிதழ்களுக்கான விருதுக்காக புது எழுத்து தேர்வு செய்யப்பட்டது.
தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் கடந்த 19-ம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சியில் அதன் துணைவேந்தர் ம.இராசேந்திரன், மாநிலங்களவை உறுப்பினர் கவிஞர் கனிமொழி, அமைச்சர் உபயத்துல்லா ஆகியோர் முன்னிலையில் எழுத்தாளர் மனோன்மணிக்கு விருது வழங்கப்பட்டது.
முதல் சிற்றிதழ் விருது பெற்றுள்ள மனோன்மணி, பரிசுத் தொகையுடன் பாராட்டுப் பத்திரமும் வழங்கி கெüரவிக்கப்பட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஆர்பிஐ துணை ஆளுநராக ரோகித் ஜெயின் நியமனம்
டி20 உலகக் கோப்பைத் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு!

என்எஸ்டிஎல் 4வது காலாண்டு நிகர லாபம் 8.4% உயர்வு!

பாட்டியாலா சரக்கு ரயில் பாதை வெடி வைத்து தகர்க்க முயற்சி: மேலும் ஒருவர் கைது
வீடியோக்கள்

#ipl2026 | CSK vs MI: யாருக்கு வெற்றி வாய்ப்பு? | Chennai Super Kings | Mumbai Indians |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | "உலகக் கோப்பை ஜெயிக்க உங்களுக்கு கிளாசென் வேண்டும்" |
தினமணி செய்திச் சேவை

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை


