/

சாலை சீரமைப்பு பணிகள் எப்போது?

திருவள்ளூர், ஆக. 9: திருவள்ளூர் நகரில் பழுதடைந்த சாலைகளை உடனே சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்நோக்கி உள்ளனர்.  ÷திருவள்ளூர் நகராட்சியில் மொத்தம் உள்ள 27 வார்டுகளிலும் ரூ.54 கோடி செலவில் பாதாள சாக

News image
Updated On :26 செப்டம்பர் 2012, 5:43 am

திருவள்ளூர், ஆக. 9: திருவள்ளூர் நகரில் பழுதடைந்த சாலைகளை உடனே சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்நோக்கி உள்ளனர்.

 ÷திருவள்ளூர் நகராட்சியில் மொத்தம் உள்ள 27 வார்டுகளிலும் ரூ.54 கோடி செலவில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

 ÷இதற்காக நகரின் அனைத்து சாலைகள், தெருக்களில் பள்ளங்கள் தோண்டப்பட்டு குழாய்கள் பதிக்கப்பட்டு வருகின்றன. திருவள்ளூர் நகரின் மையப்பகுதியான ஜே.என். சாலை வழியாகதான் திருப்பதி, திருத்தணி, பூந்தமல்லி, காஞ்சிபுரம், ஸ்ரீ பெரும்புதூர் போன்ற ஊர்களுக்கு செல்ல முடியும்.

 ÷மேலும் தேரடியில் இருந்து ரயில் நிலையத்துக்கு நாள்தோறும் நூற்றுக்கணக்கான ஆட்டோக்கள், பஸ்கள் மூலம் ஆயிரக்கணக்கான பயணிகள் சென்று வருகின்றனர்.

 ÷அமைச்சர் ரமணாவின் தீவிர முயற்சியால் ஜே.என். சாலையில் பாதாள சாக்கடை திட்டப் பணிகள் துரிதமாக நடந்து வருகின்றன.

 ÷சில இடங்களில் பணிகள் முடிந்து விட்ட நிலையில் அவற்றை உடனே சீரமைத்து போக்குவரத்துக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். குறிப்பாக தீயணைப்பு நிலையம் அருகே சாலை மிகவும் அவல நிலையில் குண்டும், குழியுமாக காணப்புடுகிறது. நெடுஞ்சாலைத் துறை உடனே சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்நோக்கி உள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.