நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

6 மணி நேர மின்வெட்டு அல்லல்படும் பொதுமக்கள்

சிதம்பரம், மார்ச் 2: சிதம்பரம் நகரில் வியாழக்கிழமை முதல் பகல் வேளையில் 6 மணி நேரம் மின்வெட்டு செய்யப்படுகிறது. இதனால் மாணவர்கள், வியாபாரிகள், பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். சிதம்பரம் நகரில்

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 12:32 am

ஜி.சுந்தரராஜன்

சிதம்பரம், மார்ச் 2: சிதம்பரம் நகரில் வியாழக்கிழமை முதல் பகல் வேளையில் 6 மணி நேரம் மின்வெட்டு செய்யப்படுகிறது. இதனால் மாணவர்கள், வியாபாரிகள், பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

சிதம்பரம் நகரில் வியாழக்கிழமை முதல் 6 மணி நேரம் மின்வெட்டு செய்யப்படுகிறது. உதாரணமாக காலை 9 மணி முதல் 12 மணி வரையும், மாலை 3 மணி முதல் 6 மணி வரையும் மின்வெட்டு செய்யப்படுகிறது. தற்போது பனி காலம் முடிவுற்று வெயில் காலம் தொடங்கியுள்ளது. இந்நிலையில் பகல் வேளையில் 6 மணி நேரம் மின்வெட்டு செய்யப்படுவதால் தேர்வுகள் தொடங்கிய நிலையில் உள்ள மாணவ, மாணவிகள், வியாபாரிகள், பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

இதுகுறித்து நகர மக்கள் தெரிவித்த கருத்துகள்:

எம்.கண்ணன் (வாட்ச் கடை பணியாளர்)- 6 மணி நேரம் மின்வெட்டு மக்களை இயல்பு வாழ்க்கையை பாதித்துள்ளது. தேர்தல் நேரத்தின் போது மின்வெட்டு படிப்படியாக குறைக்கப்படும் என வாக்குச் சேகரித்தனர். தற்போது படிப்படியாக மின்வெட்டு அதிகரித்துள்ளதே தவிர குறைந்தபாடில்லை.

மா.கோ.தேவாரசன் (ஆலோசகர்- தமிழக உழவர் முன்னணி)- ஏற்கெனவே மாவட்ட உழவர்கள் புயலால் பாதிக்கப்பட்டுள்ளனர். நெல்லின் விளைச்சலும் வீழ்ச்சியடைந்துள்ளது.

இந்நிலையில் மின்வெட்டு அதிகரிப்பு தொடருமானல் உழவர்கள் தொடங்க இருக்கும் முன் குறுவை நெல் சாகுபடியும் பாதிக்கும் ஆபத்துள்ளது.

கு.சிவப்பிரகாசம் (அமைப்பாளர்- சிறுதொழில் முனைவோர் அமைப்பு)- மின்வெட்டினால் லட்சக்கணக்கான தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் சிறுதொழில் முனைவோரின் தொழிலை முடக்கி போட்டுவிட்டது. இவ்வளவு கடுமையான மின்வெட்டை ஏற்கும் அளவுக்கு தமிழ்நாடு மின்சார பற்றாக்குறையான மாநிலம் அல்ல.

பன்னாட்டு, வட நாட்டு பெரு நிறுவனங்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்குவதை மாற்றி அவர்களுக்கு மின்வெட்டை அமல்படுத்த வேண்டும். நெய்வேலி மின்சாரத்தை தமிழக அரசு கேட்டு பெற்று மின்வெட்டை போக்க வேண்டும்.

வ.க.செல்லப்பன் (மாவட்ட துணைச் செயலாளர்) விடுதலைச் சிறுத்தைகள் கட்சி)- கிராமப் புறங்களில் சுமார் 8 மணி நேரத்துக்கு மேலாக இரவு, பகல் பாராமல் மின்வெட்டு செய்யப்படுவதால் மாணவ, மாணவிகள் தேர்வுக்கு படிக்க இயலவில்லை. மின்வெட்டினால் விவசாயிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

எனவே கடும் மின்வெட்டை கண்டித்து போராட்டம் நடத்தவுள்ளோம்.

மண்ணெண்ணெய் தட்டுபாடு, விலை உயர்வு

சிதம்பரம் பகுதியில் 6 மணி நேர மின்வெட்டினால் நகைக்கடைகள், வங்கிகள், பெரிய தொழில் நிறுவனங்கள் ஆகியவற்றில் ஜெனரேட்டர் பொருத்தப்பட்டுள்ளது. ஜெனரேட்டருக்கு தேவையான மண்ணெண்ணெய் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. வெளி மார்க்கெட்டில் ஒரு லிட்டர் ரூ.40 முதல் 50-க்கும் விற்பனையாகிறது.

இவை மட்டுமல்லாமல் மெழுகுவர்த்தி அதிகளவு விற்பனையாவதால் அதற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மின்சாரத்தை சேமித்து வைக்கும் இன்வெர்ட்டர்கள், பேட்டரிகள் அமோகமாக விற்பனையாகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.