நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

அடிப்படை வசதிகளின்றி சுற்றுலாப் பயணிகள் அவதி

சிதம்பரம், மார்ச் 13: கோயில் நகரமும், சுற்றுலா நகரமுமான சிதம்பரத்தில் அடிப்படை வசதிகள் இல்லாததால் நடராஜர் கோயிலுக்கு வரும் பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் பெரும் சிரமத்துக்கு உள்ளாகின்றனர். பஞ்ச

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 12:44 am

ஜி.சுந்தரராஜன்

சிதம்பரம், மார்ச் 13: கோயில் நகரமும், சுற்றுலா நகரமுமான சிதம்பரத்தில் அடிப்படை வசதிகள் இல்லாததால் நடராஜர் கோயிலுக்கு வரும் பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் பெரும் சிரமத்துக்கு உள்ளாகின்றனர்.

பஞ்ச பூத தலங்களில் ஆகாய தலமாகவும், பூலோக கைலாயமாகவும் விளங்கும் சிதம்பரத்தில் உலக பிரசித்தி பெற்ற ஸ்ரீ நடராஜர் கோயில் உள்ளது. சிறப்பு வாய்ந்த ஆன்மிக தலமான நடராஜர் கோயிலும், அண்ணாமலைப் பல்கலைக்கழகமும் உள்ள நகரம் சிதம்பரம்.

அதிக பயணிகள்: தினந்தோறும் நடராஜர் கோயிலுக்கு வெளிநாடுகளிலிருந்தும், வெளி மாநிலங்களிலிருந்தும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். அதேபோன்று அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தொலைதூரக்கல்வி இயக்ககத்தில் பயிலும் மாணவ, மாணவிகள் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தினந்தோறும் சிதம்பரம் வந்து செல்கின்றனர்.

சிதம்பரம் நகருக்கு வரும் இவர்கள் தங்குவதற்கும், குளிப்பதற்கும், இயற்கை உபாதைகளை கழிப்பதற்கும் போதிய வசதி இல்லாததால் பெரும் சிரமத்துக்கு உள்ளாகின்றனர்.

தங்கும் விடுதிகளில் அதிக கட்டணம்: சிதம்பரத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட தனியார் தங்கும் விடுதிகள் உள்ளன. ஆனால் கூடுதல் கட்டணம் காரணமாக ஏழை-எளிய மக்கள் தங்க முடிவதில்லை. தொலைதூரக் கல்வி மையத்துக்கு வரும் மாணவ, மாணவிகள் மற்றும் வெளி மாநிலத்திலிருந்து வந்து பயிலும் மாணவர்கள் தனியார் விடுதிகளில் தங்கியுள்ளதால் சுற்றுலாப் பயணிகள் பலர் அறைகள் கிடைக்காமல் திரும்பிச் செல்கின்றனர்.

பாதுகாப்பு இல்லை:கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை நிலவுகிறது. கீழ் சந்நிதியில் உள்ள புறக்காவல்நிலையம், பஸ் நிலையத்தில் உள்ள புறக்காவல் நிலையம் ஆகிய இரண்டும் போதிய போலீஸார் இல்லாததால் பூட்டப்பட்ட நிலையிலேயே உள்ளன. திருவிழாக் காலங்களில் மட்டும் அந்த புறக்காவல் நிலையங்கள் செயல்படுகின்றன. இதனால் சமூகவிரோதிகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக கோயிலுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் நகைகளையும், பொருள்களையும் பறிகொடுத்தும் வருகின்றனர். சமீபத்தில் வெளிநாட்டில் இருந்த வந்த சுற்றுலாப் பயணியின் பாஸ்போர்ட், பணம் உள்ளிட்டவை திருடுபோனது குறிப்பிடத்தக்கது.

நகராட்சி மீது புகார்: சுற்றுலா பயணிகளுக்காக எவ்வித அடிப்படை வசதியையும் கோயில் நிர்வாகமும், நகராட்சி நிர்வாகமும் செய்து தரவில்லை என பயணிகள் குற்றம் சாட்டுகின்றனர். சிதம்பரம் போன்ற பல கோயில் நகரங்களில் நகராட்சி சார்பில் யாத்ரீகர்கள் தங்கும் விடுதிகள், இலவச கழிப்பறைகள், குளியறைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால் சிதம்பரத்தில் ஏழை, எளிய மக்கள் தங்கும் வகையில் யாத்ரீகர்கள் தங்குவதற்கு கட்டடம் கிடையாது. இலவச கழிப்பறைகள், குளியலறைகள் கிடையாது. பஸ் நிலையம், கீழரத வீதியில் உள்ள நகராட்சி கட்டண கழிப்பறையில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதால் சுற்றுலாப் பயணிகள் அவதிக்குள்ளாகின்றனர்.

வாகனங்களுக்கு கூடுதல் கட்டணம்: மேலும் கோயிலுக்கு வரும் சுற்றுலா பயணிகளின் கார், வேன். பஸ் போன்ற வாகனங்களுக்கு நகராட்சி வரி என்ற பெயரில் கூடுதலாக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. பஸ்ஸýக்கு ரூ. 100-ம், வேனுக்கு ரூ. 50-ம், காருக்கு ரூ. 25-ம் வசூலிக்கப்படுகிறது. ஆனால் பஸ்ஸýக்கு ரூ. 25, வேனுக்கு ரூ. 15, காருக்கு ரூ. 10, தான் வசூலிக்க வேண்டும் என நகராட்சி சார்பில் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று கழிப்பறையில் இயற்கை உபாதை செல்ல ரூ. 5-ம், குளிப்பதற்கு ரூ. 10-ம் வசூலிக்கப்படுகிறது. அதுவும் சுகாதாரமானதாக இல்லை என சுற்றுலா பயணிகள் கூறுகின்றனர். இதுகுறித்து நகராட்சி அதிகாரிகளை தொடர்பு கொண்டு கேட்டால் கூடுதல் தொகைக்கு ஏலம் எடுப்பதால் அவர்கள் அதிக கட்டணம் வசூலிப்பதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.



எம்எல்ஏ பாலகிருஷ்ணன் கருத்து

சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் சிதம்பரத்தில் இல்லை. தமிழக அரசு சுற்றுலாத்துறையிடம் நகராட்சி நிர்வாகம் நிதி பெற்று ஏழை, எளிய மக்கள் தங்கும் வகையில் யாத்ரீகர்களுக்கான தங்குமிட கட்டடம் வேண்டும். இலவச குளியலறைகள் மற்றும் கழிப்பறைகளை அமைக்க வேண்டும்.

குளியலறைகள் மற்றும் கழிப்பறைகளை ஏலம் விடும் போது நகராட்சி நிர்ணயித்த கட்டணத்தை மட்டுமே வசூலிக்க வேண்டும் என்று வாக்குறுதி பெற்று ஏலம் விட வேண்டும் என நகராட்சி அதிகாரிகளிடம் கேட்டுக் கொண்டுள்ளேன். அதனையும் மீறி கூடுதல் தொகைக்கு ஏலம் விட்டு, ஏலம் எடுத்தவர்கள் மக்களிடம் கூடுதல் தொகை வசூலிக்கப்பட்டால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போராட்டம் நடத்தப்படும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.