சாலை ஆக்கிரமிப்பால் போக்குவரத்து நெரிசல்
திருத்தணி, மே 8: பள்ளிப்பட்டு பஸ் நிலையத்தை ஒட்டியுள்ள சாலையை ஆக்கிரமித்து, அமைக்கப்பட்டுள்ள கடைகளால், போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்படுகிறது. ÷பள்ளிப்பட்டு பேரூராட்சியில் மொத்தம் 17 வார்டுகள் உள்ளன


திருத்தணி, மே 8: பள்ளிப்பட்டு பஸ் நிலையத்தை ஒட்டியுள்ள சாலையை ஆக்கிரமித்து, அமைக்கப்பட்டுள்ள கடைகளால், போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்படுகிறது.
÷பள்ளிப்பட்டு பேரூராட்சியில் மொத்தம் 17 வார்டுகள் உள்ளன. பஸ் நிலையத்தில் இருந்து சித்தூர், வேலூர், சோளிங்கர், ஆற்காடு, வேலூர், அரக்கோணம், திருத்தணி, ஆந்திர மாநிலம் பலமேரி, நகரி, புத்தூர், திருப்பதி ஆகிய ஊர்களுக்குச் செல்ல தினசரி ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பள்ளிப்பட்டுக்கு வந்து செல்கின்றனர்.
÷மேலும் வட்டாட்சியர் அலுவலகம், சார்பதிவாளர் அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம், பேரூராட்சி அலுவலகம், அரசு ஆரம்ப சுகதார நிலையம், அரசு மேல்நிலைப் பள்ளிகள் உள்ளிட்ட அரசு அலுவலகங்களும் இயங்கி வருகின்றன.
÷மேற்குறிப்பிட்ட அலுவலகங்களுக்கு தினசரி ஆயிரக்கணக்கில் பொதுமக்கள் வந்து செல்கின்றனர். மேலும் பள்ளிப்பட்டு ஒன்றியத்தில் உள்ள 30-க்கும் மேற்பட்ட ஊராட்சிகளில் இருந்து அத்தியவசியப் பொருள்கள் வாங்க பள்ளிப்பட்டுக்கு வந்து செல்ல வேண்டியுள்ளது.
÷பள்ளிப்பட்டில் ஆர்.கே.பேட்டை சாலை, நகரி சாலை, பஸ் நிலையச் சாலை ஆகிய இடங்களில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால், நாள் முழுவதும் அத்தெருவில் வாகனப் போக்குவரத்து மிகுந்து காணப்படுகிறது.
÷இந்நிலையில், அச்சாலை மற்றும் பஸ் நிலையம் ஒட்டியுள்ள பகுதியில், சாலையோரத்தை ஆக்கிரமித்து, காய்கறிக் கடை, செல்போன் கடை, பெட்டிக் கடை உள்ளிட்ட பல கடைகள் அமைக்கப்பட்டுள்ளன.
÷அங்கு, காய் உள்ளிட்டவை வாங்க வரும் மக்கள், தங்களது வாகனங்களை சாலைகளிலேயே நிறுத்துவதால், இட நெருக்கடி ஏற்படுகிறது.
÷இதனால், மேற்குறிப்பிட்ட சாலைகளுக்குச் செல்லும் மக்கள் மற்றும் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதை, பேரூராட்சி நிர்வாகத்தினர் கவனத்தில் கொண்டு, சம்மந்தப்பட்ட சாலையில் உள்ள ஆக்கிரமிப்பை விரைந்து அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பள்ளிப்பட்டு மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...