பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

நூலகம் இருந்தும் பயனில்லை; மக்கள் வரிப்பணம் ரூ.2.20 லட்சம் வீண்

பட்டாபிராமாபுரம் ஊராட்சியில் செயல்பட்டுவந்த நூலகக் கட்டடம் கடந்த

News image
Updated On :24 நவம்பர் 2012, 10:03 pm

ஜி. யோகானந்தம்

பட்டாபிராமாபுரம் ஊராட்சியில் செயல்பட்டுவந்த நூலகக் கட்டடம் கடந்த 3 ஆண்டுகளாக காரணமில்லாமல் பூட்டு போடப்பட்டுள்ளது. இதனால் பள்ளி, கல்லூரி மாணவர்கள் வேறு நூலகங்களுக்குச் செல்ல 3 கி.மீ. தூரம் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

 மாநிலம் முழுவதும் கிராம பஞ்சாயத்துகளில் வசிக்கும் மக்களுக்காக, எஸ்.ஜி.ஆர்.ஒய். (மாவட்ட ஊராட்சி) திட்டம் மூலமும், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின்கீழ், மயான வசதி, நூலக வசதி, பூங்கா வசதி ஆகியவற்றை ஏற்படுத்தி தர அரசு உத்தரவிட்டது. மாநிலம் முழுவதும், மூன்று லட்சம் முதல் ஐந்து லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் இக்கட்டடங்கள் கட்டப்பட்டன.

÷இதில் திருத்தணி ஒன்றியத்துக்கு உட்பட்ட பட்டாபிராமாபுரம் ஊராட்சியில் கடந்த 2007 - 2008ஆம் ஆண்டில் எஸ்.ஜி.ஆர்.ஒய். திட்டம் சார்பில் ரூ.2.20 லட்சம் மதிப்பில் நூலகக் கட்டடம் கட்டப்பட்டு, பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்களிடம் வரவேற்பை பெற்றது. இந்நூலகம் தினமும், காலை 8 மணி முதல் 1 மணி வரையும், மாலை 4 மணி முதல் 7 மணி வரையும் செயல்பட்டது.

÷இந்த நூலகத்தால் பட்டாபிராமாபுரம், வினாயகபுரம் பகுதி பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் ஆகியோர் பெரிதும் பயனடைந்தனர். ஆனால் கடந்த 3 ஆண்டுகளாக நூலகக் கட்டடம் பூட்டி வைக்கப்பட்டுள்ளதால், பள்ளி, கல்லூரி மாணவர்கள், சமூக ஆர்வலர்கள் ஏமாற்றத்துடன் திரும்புகின்றனர்.

÷இதுகுறித்து கிராம மக்கள் கூறியது: நூலகம் திறந்து சில மாதங்கள் வரை நூலகக்  கட்டடம் செயல்பட்டது. இதனால் பள்ளி, கல்லூரி மாணவர்கள் பெரிதும் பயனடைந்தனர். ஆனால் அடுத்தடுத்த சில மாதங்களுக்குள் நூலகக் கட்டடத்துக்கு பூட்டு போடப்பட்டது. தற்போதோ நூலகக் கட்டடம் திறக்கப்படாததால் மாணவர்களுக்கு எழும் சந்தேகங்களுக்கு குறிப்பு எடுக்க 3 கி.மீ. தொலைவில் உள்ள திருத்தணி நகருகில் உள்ள கிளை நூலகத்துக்கு சென்று வரவேண்டியுள்ளது.

 இதுகுறித்து பல முறை ஊராட்சி மன்றத் தலைவரிடம் நூலகக் கட்டடத்தை திறந்து பயன்பாட்டுக்குக் கொண்டுவர வேண்டும் என புகார் தெரிவித்தும் எவ்வித பயனுமில்லை என்றார்.

 எனவே பூட்டிக் கிடக்கும் பட்டாபிராமாபுரம் கிராம நூலகத்தை திறந்து, மாணவ, மாணவியர் பயனடைய, மாவட்ட நிர்வாகம் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.