மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள்துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர்: சர்வதேச அளவில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - பிரான்ஸ் அதிபர்!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுபஹ்ரைன் நாட்டிலுள்ள தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை
/

சாலையைக் கடக்க சுரங்கப்பாதை வேண்டும்: கிராம மக்கள்

சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையை கடக்க பாலமோ

News image
Updated On :2 ஜனவரி 2024, 7:10 pm

எம்.சுந்தரமூா்த்தி

சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையை கடக்க பாலமோ, சுரங்கப் பாதையோ அமைக்கப்படாததால் அப்பகுதியைச் சுற்றியுள்ள 5 கிராம மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

 பொன்னேரி தாலுகா, சோழவரம் ஒன்றியத்தில் தேவனேரி, பழைய எருமை வெட்டிப்பாளையம், புதிய எருமை வெட்டிப்பாளையம், புதுக்குப்பம் உள்ளிட்ட 5 கிராமங்கள் உள்ளன.

 இக்கிராமங்களில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள மாணவர்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு செல்வதற்காக காரனோடை அல்லது சோழவரம் வந்துதான் செல்ல வேண்டும். அதேபோல, அத்தியாவசியப் பொருள்கள் அனைத்தும் இந்தப் பகுதிகளில்தான் கிடைக்கின்றன.

 சோழவரம், காரனோடை ஆகிய பகுதிகளுக்கு செல்வதற்காக அவர்கள் அன்றாடம் சென்னை - கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையை கடக்க வேண்டும். ஆனால், நெடுஞ்சாலையில் எப்போதுமே வாகனங்கள் கடுமையான வேகத்தில் வந்து செல்கின்றன.

 எனவே, இந்த சாலையை கடக்க மக்கள் மிகவும் கஷ்டப்படுகின்றனர். மேலும் விபத்துகள் நடக்கவும் அதிக வாய்ப்புள்ளன. இந்நிலையில், பொதுமக்கள் கடந்து செல்வதற்கு வசதியாக பாதை வளைவைகூட தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் அங்கு அமைக்கவில்லை. இதனால் இரு சக்கர வாகனங்களில் செல்வோர் 1 கி.மீ. தூரம் சுற்றி சென்று சாலையை கடக்க வேண்டியுள்ளது.

 தற்போது இங்கு ஆறு வழிச் சாலை அமைக்க பல கோடி ரூபாய் செலவில் பணிகள் நடைபெற்று வருகின்றன. எனவே, இங்குள்ள மக்களின் நலன் கருதி தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் இங்கு சிறிய அளவிலான பாலம் அல்லது சுரங்கப் பாதையை அமைத்துத் தர வேண்டும். மேலும் உயர்கோபுர மின்விளக்கையும் அமைத்துத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.