பாஜக வேட்பாளர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்! அண்ணாமலைபாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு! அண்ணாமலை பெயர் இல்லைகடும் வெய்யில் வாட்டுவது ஏன்? வானிலை நிபுணர்கள் சொல்வது என்ன?மகிழ்ச்சியான செய்தி! சென்னையில் புதிய கலை, அறிவியல் கல்லூரிகள்!தவெக தலைவர் விஜய் பிரசாரத்துக்கு இப்படியும் ஒரு சோதனையா?சென்னை புறநகர் ரயில் சேவை சீரானது! பழைய அட்டவணைப்படி இயக்கம்!பிரதமா் மோடி இன்று வருகை: புதுச்சேரியில் போக்குவரத்து மாற்றம்பிரதமா் நரேந்திர மோடி இன்று சென்னை வருகைதென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஏப்ரல் 4 வரை மழைக்கு வாய்ப்பு
/

விவசாயத்துக்கு கேடு விளைவிக்கும் எலிகளைக் கட்டுப்படுத்துவது எப்படி?

புதுச்சேரி: விவசாயிகள் விளைவிக்கும் தானியங்கள், பெரும்பாலும் எலிகளால் பெரும் சேதம் அடைகின்றன. இதனால், விவசாயிகள் கடும் நஷ்டத்தை அடையும் சூழ்நிலை உண்டாகிறது. இந்த எலிகளை முறையான வழிகளை பயன்படுத்தி அழிக

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 12:20 am

தினமணி

புதுச்சேரி: விவசாயிகள் விளைவிக்கும் தானியங்கள், பெரும்பாலும் எலிகளால் பெரும் சேதம் அடைகின்றன. இதனால், விவசாயிகள் கடும் நஷ்டத்தை அடையும் சூழ்நிலை உண்டாகிறது.

இந்த எலிகளை முறையான வழிகளை பயன்படுத்தி அழிக்கலாம். அவற்றை இங்கு காண்போம்.

தற்போது பகல் நேரத்தில் அதிக வெப்பநிலையும், இரவு நேரத்தில் குறைவான வெப்பநிலையும் நிலவி வருகிறது. இந்த வெப்பநிலை மாறுபாட்டால், வீட்டிலும், வயல்வெளிகளிலும், தென்னை தோப்புகளிலும் எலிகளின் தொல்லை அதிகமாக காணப்படுகிறது.

எலிகளால் ஏற்படும் சேதங்களையும், இழப்பையும் தடுக்க, வயல்களிலும், வீட்டிலும், தென்னைமர தோப்பிலும் ஒருங்கிணைந்த எலி ஒழிப்பு முறைகளை கடைபிடிக்க வேண்டும்.

எலிகளின் வகைகள் குறித்தும், அதை கட்டுப்படுத்தும் வழிகள் குறித்தும் பெருந்தலைவர் காமராஜர் வேளாண்மை அறிவியல் நிலையத்தின் பூச்சியியல் துறை வல்லுநர் நி.விஜயகுமார் கூறியது: பொதுவாக எலிகளில் இரண்டு வகைகள் உண்டு. அவை, வயல் எலிகள் மற்றும் வீட்டு எலிகள் ஆகும்.

வயல் எலிகளிலும் கூட வளை எலி, புல் எலி, கெர்பில் எலி மற்றும் சுண்டெலி என நான்கு வகைகள் உண்டு. அதேபோல், சாதாரண வீட்டு எலி மற்றும் மர எலி போன்ற எலிகளும் உள்ளன. வயல் எலிகள், வயலில் உள்ள பயிர்களின் கதிர்களையும், தானியங்களையும், காய்கறி மற்றும் பழங்களையும் உண்பதோடு, அவைகளை அதிகமாக சேதப்படுத்தி விடும்.

ஆனால், வீட்டு எலிகளோ வீட்டில் உள்ள கூரை, பரண், மறைவான இடங்கள், சேமிப்பு அறைகள் மற்றும் சேமிப்பு கிடங்குகளில் உள்ள தானியங்கள், பயறு வகைகள், தீவனங்கள், காய்கறிகள் ஆகியவற்றை சேதப்படுத்துகின்றன. மர எலியானது தென்னைமர இளம் காய்கள் மற்றும் இளநீர்களை வெட்டி சேதப்படுத்துகின்றன. மேலும் எலிகளின் கழிவுகளாலும், உணவுப் பொருள்கள் அசுத்தப்படுகின்றன. இதனால் நோய் பரவுமும் தன்மை உண்டாகின்றன.

எலிகளால் ஓர் ஆண்டுக்கு சராசரியாக 5-10 சதவிகிதம் பொருளாதார இழப்பு ஏற்படுகிறது. ஓர் ஆண்டுக்கு எலிகளினால் 20 மெட்ரிக் டன் அளவு வயலிலும், 33 மெட்ரிக் டன் அளவு சேமிப்பு கிடங்குகளிலும் பாதிப்பு ஏற்படுகிறது.

மேலும் எலிகளால் மனித இனத்திற்கு பிளேக், ரேபீஸ், மஞ்சள் காமாலை, எலிக்கடி காய்ச்சல் போன்ற நோய்களும் பரவுகின்றன.

பொதுவாக எலிகளுக்கு தொடு உணர்வு, நுகர் உணர்வு, ருசி உணர்வு மற்றும் ஒலிகளை கேட்கும் உணர்வு மிகவும் அதிகம். சாதாரணமாக ஒரு ஜோடி எலிகள் ஒரு ஆண்டில் 6 முறை குட்டி போடுவதுடன், அவைகளின் வளர்ச்சி 6 மாதங்கள் வரை நீடிக்கும்.

நல்ல ஆரோக்கியமான 800 கிராம் முதல் ஒரு கிலோ எடையுள்ள எலிகள் 37 மாதங்கள் வரை உயிர் வாழும். எலிகள் ஒரு வருடத்திற்கு, சராசரியாக 20 குட்டிகளை ஈன்றெடுக்கும். எலிகளால் உணவு இல்லாமல் 7 நாட்களும், நீர் இல்லாமல் 2 நாட்களும் தாக்குப் பிடிக்க முடியும்.

ஒரு எலிக்கு நாளொன்றுக்கு 24 கிராம் உணவு தானியமும், 40 மி.லி. நீரும் தேவைப்படுகிறது.

எலிகளிடமிருந்து

உணவுப் பொருள்களை பாதுகாக்க...

வீடுகளின் ஓரம், சாலையோரங்கள், சேமிப்பு கிடங்குகளின் ஓரப்பகுதிகள் ஆகியவற்றில் குப்பைகளைக் கொட்டி வைக்கக்கூடாது. சேமித்து வைக்க வேண்டிய உணவுப் பொருள்களை, 45 செ.மீ உயரத்தில் பரன்கள் அமைத்தும் அல்லது பலகைகள் போட்டு கோணிப்பைகளில் கட்டியும் அடுக்கி வைக்கலாம். உணவுப் பண்டங்களை உலோகம் அல்லது பிளாஸ்டிக் கொள்கலன்களில் வைக்க வேண்டும். வீடு மற்றும் சேமிப்பு கிடங்குகளில் உள்ள சுவர், தரை, கதவு, ஜன்னல் போன்றவற்றில் உள்ள ஓட்டைகளை அடைக்க வேண்டும்.

எலிகளை கட்டுப்படுத்தும் வழிகள்

வயல்களில் எலிகளை பிடிக்க கூண்டுப் பொறி, கிடுக்கி பொறி, மூங்கில் வில் பொறி, தஞ்சாவூர் மூங்கில் வில் பொறி ஆகியவற்றில் ஏதாவது ஒரு பொறியை அமைக்கலாம். ஒரு எலி வளையில் அலுமினியம் பாஸ்பைடு மாத்திரைகளை அரை கிராம் என்ற அளவில் வைக்கலாம்.

எலிகளை பிடிக்கும் உயிரினங்களான பூனைகளை வீட்டிலும், ஆந்தைகள், கீரிப்பிள்ளைகள், பாம்புகள் போன்றவற்றை வயலிலும் அழியாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். வெண்மை நிறத் துணியை குச்சியில் கட்டியும், சிறிய மண் பானைகளின் மீது வெண் புள்ளிகள் வைத்தும் ஆந்தை பந்தம் அமைக்கலாம். வெள்ளை நிறத்தை கண்டால் எலிகள் அங்கிருந்து ஓடிவிடும்.

நஞ்சுணவை தயாரிப்பது எப்படி?

துத்தநாக பாஸ்பைடு 1 பங்கு, உணவுப் பொருள் 19 பங்கு சேர்த்து நஞ்சு உணவு உருவாக்கி ஒரு டீஸ்பூன் அளவில் ஒரு ஏக்கருக்கு 10 இடங்களில் வைத்து எலிகளை அழிக்கலாம். இரத்தம் உறையாமல் செய்யும் மருந்துகளை வைத்தும் எலிகளை கொல்லலாம். அதாவது, உணவுப் பொருள் (அரிசி, கேழ்வரகு, மாவு) 450 கிராம், சமையல் எண்ணெய் 10 கிராம், நாட்டுச் சர்க்கரை 15 கிராம், "வார்பரின்', ரோடாஃப்ரின், டோமோரின், புரோமோடைலான் 25 கிராம் ஆகியவை சேர்த்த நஞ்சு கலந்த இந்த உணவை 6 டீஸ்பூன் அளவுகளில், ஒவ்வொரு இடத்திலும் வைக்க வேண்டும்.

எலிகள் முழுவதும் அழியும் வரை தொடர்ந்து இந்த நஞ்சுணவை வைக்க வேண்டும். இது வீட்டு எலிகளை ஒழிக்க சிறந்த முறையாகும். மேலும் புதிதாக வடிவமைக்கப்பட்டுள்ள ஒட்டுப் பொறிகளை வைத்தும் வீட்டு எலிகளை ஒழிக்கலாம்.

மேலும் உடைந்த அரிசி 93 கிராம், சர்க்கரை 3 கிராம், கடலை எண்ணெய் 2 கிராம், புரோமோடைலான், ரொபான் அல்லது ரேட்டால் 2 கிராம் சேர்த்து ஒவ்வொரு இடத்திலும் வைக்க வேண்டும்.

எலிகள் முழுவதும் அழியும் வரை தொடர்ந்து இந்த நஞ்சுணவை வைக்க வேண்டும். இது சேமிப்பு கிடங்குகளில் எலிகளை ஒழிக்க சிறந்த முறையாகும்.

உடைந்த கோதுமை 65 கிராம், வெல்லம் அல்லது நாட்டுச் சர்க்கரை 3 கிராம், 0.25 சதவீத புரோமோடைலான் 02 கிராம், பாரபின் மெழுகு 30 கிராம் என மேற்படி நஞ்சு கலந்த உணவினை 5 செ. மீ நீளம் மற்றும் 2.5 செ. மீ அகலம் என்ற அளவில் சிறிய சிறிய கேக்குகளாக வெட்டி 5 கேக்குகள் என்ற அளவில் பொந்துகள், வலைகள், தென்னை மரம் மேல், வீட்டின் கூரைகள் போன்ற இடங்களில் வைக்க வேண்டும்.

எலிகள் முழுவதும் அழியும்வரை இதை வைக்க வேண்டும். இந்த முறைகளை கையாண்டால் எலிகளை எளிதில் ஒழிக்கலாம் என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.