சேலம் பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்: மு. வீரபாண்டியன்5 மாவட்டங்களில் நாளை மழைக்கு வாய்ப்பு!பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறியது தமாகா! ராகுல் காந்தி இந்தியாவின் சாதனைகளைக் குறைத்து மதிப்பிடுகிறார்: நிர்மலா சீதாராமன் நீங்கள் எதிர்பார்த்த நல்ல முடிவை கூடிய விரைவில் அறிவிக்கவுள்ளேன்: ராகவா லாரன்ஸ் அதிமுகவில் இருந்து விலகினார் நடிகை கெளதமி!பாமகவால்தான் 31 தொகுதிகளில் அதிமுக வெற்றி: சி.வி. சண்முகம்
/

காவல் துறைக்கு புதிதாக 19,526 பேர் தேர்வு

காவல் துறையில் புதிதாக 19,526 பேர் தேர்வு செய்யப்படுவர் என்று தமிழக பட்ஜெட்டில்

News image
Updated On :22 மார்ச் 2013, 1:56 am IST

காவல் துறையில் புதிதாக 19,526 பேர் தேர்வு செய்யப்படுவர் என்று தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான பட்ஜெட் அறிவிப்புகள்: 2012-13-ம் ஆண்டு தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் மூலம் 12,152 காவலர்கள், 377 சிறைக் காவலர்கள் மற்றும் 791 தீயணைப்புப் பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நிதியாண்டில் (2013-14) 17,138 காவலர்கள், 1,091 துறை ஆய்வாளர்கள், 1,005 தீயணைப்புப் பணியாளர்கள் மற்றும் 292 சிறைக் காவலர்களை வாரியம் தேர்வு செய்யும்.

109 காவல் நிலையங்களுக்கு சொந்தக் கட்டடங்கள் கட்டுவதற்காக 2013-14 பட்ஜெட்டில் ரூ. 50 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு ரூ. 4,096.70 கோடியாக இருந்த காவல் துறைக்கான ஒதுக்கீடு இந்த ஆண்டு ரூ. 4,706.17 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது.

2012-ம் ஆண்டு தீயணைப்பு வீரர்களால் 3,796 பேர் காப்பாற்றப்பட்டதோடு, ரூ. 338 கோடி மதிப்பிலான சொத்துகள் பாதுகாக்கப்பட்டுள்ளன. கடந்த நிதியாண்டில் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைக்கு ரூ. 186.72 கோடி ஒதுக்கப்பட்டது. 2013-14-ம் ஆண்டு பட்ஜெட்டில் ரூ. 208.48 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதேபோல சிறைத் துறைக்கு ரூ. 179.67 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. நீதித் துறைக்கு ரூ. 695.28 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.