தமிழக பட்ஜெட்டில் சென்னை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு ரூ.750 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பான பட்ஜெட் அறிவிப்பு:
சென்னை மாநகரில் பல்வேறு போக்குவரத்து முறைகளை ஒருங்கிணைக்கும் ஒருங்கிணைந்த போக்குவரத்துத் திட்டம் குறித்த ஆய்வுப் பணிகள் 2013-14-ம் ஆண்டில் மேற்கொள்ளப்பட உள்ளன. மேலும் சென்னை மெட்ரோ ரயில் திட்டத்துக்காக இந்த பட்ஜெட்டில் ரூ. 750 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
டீசல் கூடுதல் செலவுக்கு ரூ. 500 கோடி: டீசல் விலையை மத்திய அரசு உயர்த்தியதன் காரணமாக போக்குவரத்துக் கழகங்களுக்கு கூடுதல் எரிபொருள் செலவு ஏற்பட்டு வருகிறது. இந்த கூடுதல் எரிபொருள் செலவை ஈடுசெய்யும் வகையில் தமிழக அரசு ரூ. 500 கோடி நிதி ஒதுக்கி உத்தரவிட்டுள்ளது.
உயர்நிலை வல்லுநர் குழு: தமிழக அரசு ரூ. 1,026 கோடியில் 6 ஆயிரம் புதிய பஸ்கள் வாங்க அனுமதி அளித்துள்ளது. இதில் 2,855 பஸ்கள் இப்போது பயன்பாட்டுக்கு வந்துள்ளன.
இதன் காரணமாக பஸ்களின் சராசரி வயது குறைந்திருப்பதோடு, ஒரு லிட்டர் டீசலுக்கு பஸ்கள் செல்லக்கூடிய தொலைவும் அதிகரித்துள்ளது. இருந்தபோதும், மாநில போக்குவரத்துக் கழகங்களின் ஒட்டுமொத்த இழப்பு அதிகமாகவே இருக்கிறது.
இப்பிரச்னைக்கு முழுமையான தீர்வு காணும் வகையில், மாநில போக்குவரத்துக் கழகங்களின் செயல்பாட்டுத் திறனை மேம்படுத்த தேவையான நடவடிக்கைகள் குறித்த ஆலோசனை வழங்க உயர்நிலை வல்லுநர் குழு அமைக்க அரசு முடிவு செய்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இந்தியாவின் மரபணுவிலேயே புதுமை: பிரான்ஸில் பிரதமர் மோடி பேச்சு

மகளிர் டி20 உலகக் கோப்பை: பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா பேட்டிங்!
நீட் தேர்வுக்கான போலி வினாத்தாள்கள் விற்ற நபர்கள் கைது!

உலகக் கோப்பையின் முதல் திருட்டு: ஹைதி தோல்விக்கு ஃபிஃபாவை விமர்சிக்கும் ரசிகர்கள்!
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |



