கூடங்குளம் அணுமின் நிலையத்தில் நடந்துவரும் சோதனை நடவடிக்கை மற்றும் நிர்வாகத்தைக் கண்டித்து செட்டிகுளத்தில் உள்ள அணுமின் நிலைய ஊழியர்களின் குடியிருப்பை புதன்கிழமை கடல் வழியாகச் சென்று முற்றுகையிடும் போராட்டம் நடத்த போராட்டக் குழுவினர் முடிவு செய்துள்ளனர்.
இது தொடர்பாக அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் எஸ்.பி.உதயகுமார், புஷ்பராயன் ஆகியோர் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
கூடங்குளம் அணுமின் நிலையத்தில் நிர்வாகம் சில நாள்களாக ஏதோ விஷப் பரீட்சை நடத்தி வருகிறது. மக்கள் மத்தியில் அச்சத்தையும் பீதியையும் கிளப்பும் வகையில் அணு உலையில் இருந்து கடும் சப்தம், புகை, துர்நாற்றம் வெளியேறுகின்றன.
அடர்த்தியான கரும்புகையும், வெள்ளைப்புகையும் மாறி மாறி வருகிறது.
மக்கள் அடர்த்தியாக வாழும் பகுதியில் அணுமின் நிலையத்தைக் கட்டிவிட்டு உலையின் அருகே வாழும் மக்களுக்கு எந்தவிதமான பேரிடர் பயிற்சியும் தராமல், எந்தவிதமான அறிவிப்பும் கொடுக்காமல் செயல்பட்டு வரும் அணுமின் நிர்வாகத்தைக் கண்டித்து புதன்கிழமை (ஏப்ரல் 3) செட்டிகுளம் அணுமின் நகரியத்தை (ஊழியர்கள் குடியிருப்பு) கடல் வழியாகச் சென்று முற்றுகையிடுகிறோம். மீனவ மக்கள் கடலுக்குச் செல்லாமல் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்வார்கள் என்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ரோஹித் சர்மா, விராட் கோலி வரிசையில் சாதனைப் பட்டியலில் இணைந்த சஞ்சு சாம்சன்!
வீட்டுக் குறிப்புகள்...

கன்னியாகுமரியில் விசில் ஊதியவாறு சைக்கிள் ஓட்டிய விஜய்!

வங்கியில் வேலை வேண்டுமா..? - உடனே விண்ணப்பிக்கவும்!
வீடியோக்கள்

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை
வியூகம் வகுத்தாச்சு; அடுத்து சூறாவளிப் பிரசாரம்தான்: சரத்குமார் | Sarathkumar |
தினமணி செய்திச் சேவை

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை


