அரசு பொறியியல் கல்லூரிகள், பாலிடெக்னிக் கல்லூரிகளில் காலியாக இருந்த ஆசிரியர் பணியிடங்களுக்கு நியமிக்கப்பட்டுள்ளவர்களுக்கு பணி நியமன உத்தரவுகளை முதல்வர் ஜெயலலிதா தலைமைச் செயலகத்தில் திங்கள்கிழமை வழங்கினார்.
தமிழகத்தில் செயல்பட்டு வரும் அரசு பொறியியல் கல்லூரிகளில் காலியாகவுள்ள 154 உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் மற்றும் அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் காலியாகவுள்ள 139 விரிவுரையாளர் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று தமிழக அரசு அறிவிப்புச் செய்தது.
அந்த அறிவிப்பின்படி ஆசிரியர் தேர்வு வாரியத்தால் போட்டித் தேர்வு நடத்தப்பட்டு, அரசு பொறியியல் கல்லூரிகளுக்கு 151 உதவிப் பேராசிரியர்களும், அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு 134 விரிவுரையாளர்களும் தேர்வு செய்யப்பட்டனர்.
தேர்வு செய்யப்பட்டவர்களுக்கான பணிநியமன உத்தரவுகளை முதல்வர் ஜெயலலிதா திங்கள்கிழமை வழங்கினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
பாஜக கூட்டணியில் இணைய சரத் பவாருக்கு மத்திய அமைச்சா் அழைப்பு

நிா்வாக வசதிகளுக்காக சென்னை மாநகராட்சியைப் பிரிக்க வேண்டும்: கராத்தே தியாகராஜன்
உலகக் கோப்பை வில்வித்தை: இந்தியாவுக்கு வரலாற்று வெற்றி

ஃபாா்முலா ஒன் (எஃப்1) காா் பந்தயம்: ஹாமில்டன் வெற்றி!
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |



