என்எல்சி நிறுவனம் தென்மாநிலங்களுக்கு வழங்கிய மின்சாரத்துக்கான கட்டண பாக்கி ரூ.4 ஆயிரத்து 690 கோடி நிலுவையில் உள்ளதாக நெய்வேலியில் திங்கள்கிழமை அதன் தலைவர் பி.சுரேந்திரமோகன் தெரிவித்தார்.
இது தொடர்பாக திங்கள்கிழமை நிருபர்கள் கேள்விக்கு பதிலளித்த என்எல்சி தலைவர் பி.சுரேந்திரமோகன்:
நெய்வேலியில் மேற்கொள்ளப்படும் 2-ம் அனல்மின் நிலைய விரிவாக்கத் திட்டத்தின் மூலம் 500 மெகாவாட் மின்னுற்பத்தி செய்யும் கட்டுமானப் பணி முடிவடையில் தருவாயில் உள்ளது.
கொதிகலன் பிரிவை நிர்மாணிக்கும் பெல் நிறுவனத்தால் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் தொழில்நுட்பக் கோளாறுகள் நீக்கப்பட்டு இந்த ஆண்டு டிசம்பருக்குள் உற்பத்தி தொடங்கப்படும் என உறுதியாக எதிர்பார்க்கிறோம்.
அதேபோன்று தூத்துக்குடியில் தமிழக மின்பகிர்மானக் கழகத்துடன் இணைந்து என்.எல்.சி. அமைத்து வரும் 1000 மெகாவாட் திறனுடைய அனல்மின் நிலையத்தின் கட்டுமானப் பணியும் விரைவில் முடியும் தருவாயில் உள்ளது. இதிலிருந்தும் டிசம்பருக்குள் உற்பத்தி தொடங்கப்படும் என எதிர்பார்க்கிறோம்.
திட்டமிட்டப்படி இவ்விரு அனல்மின் நிலையங்களில் இருந்தும் மின்னுற்பத்தி தொடங்கப்படும்பட்சத்தில் நடப்பு நிதியாண்டுக்குள் மேற்கண்ட புதிய அனல்மின் திட்டங்களின் மூலம் தமிழகத்துக்கு 617 மெகாவாட் கூடுதலாக வழங்கத் திட்டமிட்டுள்ளோம்.
மேலும் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த சுரேந்திரமோகன், என்எல்சியில் உற்பத்தி செய்யப்பட்ட மின்சாரத்தை தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்களுக்கு விற்பனை செய்ததன் மூலம் நிறுவனத்துக்கு வரவேண்டிய வருவாய் மின்கட்டண பாக்கி ரூ.4 ஆயிரத்து 690 கோடியாகும். இதில் தமிழகம் ரூ.3 ஆயிரத்து 188 கோடி (கடந்த 12 மாதங்களுக்கான பாக்கி), ஆந்திரம் ரூ.310 கோடி, கர்நாடகம் ரூ.235 கோடி, கேரளம் ரூ.151 கோடி, புதுச்சேரி ரூ. 95 கோடியாகும். இதில் தமிழகம் ரூ.1000 கோடியை விரைவில் வழங்குவதாக உறுதியளித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ரோஹித் சர்மா, விராட் கோலி வரிசையில் சாதனைப் பட்டியலில் இணைந்த சஞ்சு சாம்சன்!
வீட்டுக் குறிப்புகள்...

கன்னியாகுமரியில் விசில் ஊதியவாறு சைக்கிள் ஓட்டிய விஜய்!

வங்கியில் வேலை வேண்டுமா..? - உடனே விண்ணப்பிக்கவும்!
வீடியோக்கள்

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை
வியூகம் வகுத்தாச்சு; அடுத்து சூறாவளிப் பிரசாரம்தான்: சரத்குமார் | Sarathkumar |
தினமணி செய்திச் சேவை

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

