ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவது தொடர்ந்து அதிகரிப்புஇந்தியாவில் 100 % எத்தனால் எரிபொருள்: மத்திய அமைச்சர் கட்கரி ஒப்புதல்தமிழகத்தில் ஜூன் 20 வரை மழைக்கு வாய்ப்புஓமன் துறைமுகத்தில் உயிரிழந்த தூத்துக்குடி மாலுமி உடலைக் கொண்டுவர நடவடிக்கைதேசியவாத குடிமக்கள் கட்சியில் இணைய திரிணமூல் அதிருப்தி எம்.பி.க்கள் முடிவுமாநிலங்களவையில் மூன்றில் இருபங்கு பெரும்பான்மையை நெருங்கும் பாஜக கூட்டணி!
/

ரேஷன் கடைகளில் 2014 மார்ச் வரை மலிவு விலையில் துவரம், உளுத்தம் பருப்பு

உளுத்தம் பருப்பு, துவரம் பருப்பு மற்றும் பாமாயில் ஆகியவற்றை மலிவு விலையில் வழங்கும் சிறப்பு பொது

Updated On :2 ஏப்ரல் 2013, 1:17 am IST

உளுத்தம் பருப்பு, துவரம் பருப்பு மற்றும் பாமாயில் ஆகியவற்றை மலிவு விலையில் வழங்கும் சிறப்பு பொது விநியோகத் திட்டம் அடுத்த ஆண்டு (2014) மார்ச் இறுதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை தமிழக அரசு பிறப்பித்துள்ளது.

உளுத்தம் பருப்பு, துவரம் பருப்பு மற்றும் பாமாயில் ஆகியவற்றை ரேஷன் கடைகளின் மூலம் குறைந்த விலையில் வழங்கும் திட்டத்தை தமிழக அரசு அறிவித்தது.

கடந்த அக்டோபர் 1 ஆம் தேதி முதல் இந்த ஆண்டு மார்ச் 31 ஆம் தேதி வரையில் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தும் வகையில் தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவு காலாவதியானதைத் தொடர்ந்து புதிய உத்தரவை அரசு வெளியிட்டுள்ளது. 

இந்த உத்தரவுப்படி ஏப்ரல் 1 ஆம் தேதி தொடங்கி அடுத்த ஆண்டு மார்ச் 31 ஆம் தேதி வரையில் சிறப்பு பொது விநியோகத் திட்டத்தைச் செயல்படுத்த வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த உத்தரவை கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை செயலாளர் எம்.பி.நிர்மலா பிறப்பித்துள்ளார்.

எவ்வளவு நிதி ஒதுக்கீடு: துவரம் பருப்பை கொள்முதல் செய்ய ரூ. 314 கோடியும், உளுத்தம் பருப்பை கொள்முதல் செய்ய ரூ.251.81 கோடியும், பாமாயில் கொள்முதலுக்காக ரூ.449.20 கோடியையும் தமிழக அரசு ஒவ்வொரு ஆண்டும் செலவிடுகிறது.  நடப்பு நிதியாண்டில் உணவுத் துறைக்காக ரூ.4,900 கோடியை மானியமாக அரசு வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.