அமெரிக்கா - ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம் இறுதியானது! தமாகாவில் இருந்து யுவராஜா விலகல் தேர்வெழுத வந்த இளைஞர்கள் திடீர் ரயில் மறியல் - கல்வீச்சு! ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவது தொடர்ந்து அதிகரிப்புஇந்தியாவில் 100 % எத்தனால் எரிபொருள்: மத்திய அமைச்சர் கட்கரி ஒப்புதல்தமிழகத்தில் ஜூன் 20 வரை மழைக்கு வாய்ப்புஓமன் துறைமுகத்தில் உயிரிழந்த தூத்துக்குடி மாலுமி உடலைக் கொண்டுவர நடவடிக்கைதேசியவாத குடிமக்கள் கட்சியில் இணைய திரிணமூல் அதிருப்தி எம்.பி.க்கள் முடிவுமாநிலங்களவையில் மூன்றில் இருபங்கு பெரும்பான்மையை நெருங்கும் பாஜக கூட்டணி!
/

பொட்டுசுரேஷ் கொலை வழக்கு: மேலும் ஒருவர் சரண்

பொட்டு சுரேஷ் கொலை தொடர்பாக, மேலும் ஒருவர் மதுரை நீதிமன்றத்தில் திங்கள்கிழமை சரண் அடைந்தார்.

Updated On :2 ஏப்ரல் 2013, 4:57 am IST

பொட்டு சுரேஷ் கொலை தொடர்பாக, மேலும் ஒருவர் மதுரை நீதிமன்றத்தில் திங்கள்கிழமை சரண் அடைந்தார்.

திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் சுரேஷ்பாபு என்ற பொட்டுசுரேஷ், மதுரையில்  கடந்த ஜனவரி 31-ல் ஒரு கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

இச்சம்பவம் தொடர்பாக கீரைத்துறையைச் சேர்ந்த சபாரத்தினம், சந்தானம், விஜயபாண்டி, ஆரோக்கிய பிரபு உள்ளிட்ட 9 பேர் வெவ்வேறு நீதிமன்றங்களில் சரணடைந்துள்ளனர்.

இதன்பிறகு, இவ்வழக்கில் தொடர்புடைய மேலும் 5 பேர் கைது செய்யப்பட்டனர். இதனைத் தொடர்ந்து வில்வத்துரை என்பவர் சரண் அடைந்தார்.

இந்த வழக்கில் முக்கிய எதிரியாகக் கருதப்படும் அட்டாக்பாண்டி என்பவரை போலீஸார் தேடி வருகின்றனர்.

இந்நிலையில், மதுரை கீரைத்துரையைச் சேர்ந்த பி. திருமுருகன் என்ற காட்டுவாசி முருகன் (28) மதுரை 4 ஆவது குற்றவியல் நீதிமன்றத்தில் திங்கள்கிழமை சரண் அடைந்தார்.

அவரை 15 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி ராஜலிங்கம் உத்தரவிட்டார். பின்னர் அவர் மதுரை சிறையில் அடைக்கப்பட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.