வேலூர் மாவட்டம், அரக்கோணத்தில் வெவ்வேறு இடங்களில் இடி தாக்கியதில் 2 பேர் உயிரிழந்தனர்.
அரக்கோணம் அருகேயுள்ள அவளூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தேவராஜ் (70). இவர் ஞாயிற்றுக்கிழமை மாலை நிலத்திலிருந்து வீட்டுக்கு மாடு ஓட்டிக் கொண்டு சென்றார்.
அப்போது அவர் மீது இடி தாக்கியதாம். இதில், அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். மாடும் இறந்தது.
இதேபோல், தக்கோலம் அருகேயுள்ள சஞ்சீவராயன்பேட்டையைச் சேர்ந்த தணிகாசலத்தின் மகள் பத்மா (29). மாற்றுத்திறனாளியான இவர், அங்கன்வாடி பணியாளர். இவர் ஞாயிற்றுக்கிழமை மாலை கோயிலுக்குச் சென்றுவிட்டு வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது இடி தாக்கியதில், அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
விபத்துகள் குறித்து அரக்கோணம் வட்டாட்சியர் தமீம் விசாரணை நடத்தி வருகிறார். மேலும், அரக்கோணம் அருகேயுள்ள சித்தாம்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயராஜ். இவரது வீட்டு வாசலில் கட்டிவைக்கப்பட்டிருந்த மாடு இடி தாக்கி இறந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.









