சூடானில் டிரோன் தாக்குதல்களில் 1,000-க்கும் மேற்பட்டோர் பலி!நாங்கள் பாகிஸ்தானியர்களை நம்புவதில்லை: இஸ்ரேல் தூதர்அடுக்குமாடி குடியிருப்பு கட்டட திட்ட அனுமதி: சிஎம்டிஏவுக்கு அதிகாரம் வழங்கியது!கரப்பான்பூச்சி மக்கள் கட்சித் தலைவர் அபிஜீத் தீப்கே மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தினர்.நகர்ப்புறத்தில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை குறைவு! 6.4 % ஆக குறைந்துள்ளதுசெப். 17 முதல் 8 ஆம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்!தென் தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு!
/

25-ல் மேல்மருவத்தூரில் சித்ரா பெளர்ணமி சிறப்பு பூஜை

சித்திரா பெளர்ணமியன்று மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் உலக நன்மை வேண்டி 1008 யாக குண்டங்கள் அமைத்து சிறப்புப் பூஜை வரும் 25-

Updated On :22 ஏப்ரல் 2013, 4:32 am IST

சித்திரா பெளர்ணமியன்று மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் உலக நன்மை வேண்டி 1008 யாக குண்டங்கள் அமைத்து சிறப்புப் பூஜை வரும் 25-ஆம் தேதி நடைபெற உள்ளது.

ஆண்டுதோறும் சித்திரா பெüர்ணமியன்று மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் சிறப்பு பூஜைகள், யாகசாலை, கலசவேள்வி பூஜைகள் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு வரும் வெள்ளிக்கிழமை சித்ரா பெüர்ணமியை முன்னிட்டு பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.

இதில் உலக நன்மை வேண்டி 1008 யாக குண்டங்கள் அமைத்து கலசவிளக்கு, வேள்வி பூஜைகள் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக 1008 யாக குண்டங்கள் அமைக்கும் பணி கடந்த 15-ஆம் தேதி குரு பூஜை, வினாயகர் பூஜை, சக்தி பூஜையுடன் தொடங்கியது. வட்டம், சதுரம், சாய்சதுரம், முக்கோணம், ஐங்கோணம், அறுங்கோணம், நாகவடிவம், சூலவடிவங்களில் யாககுண்டங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.