கூடுவாஞ்சேரியை அருகே செவ்வாய்க்கிழமை இரவு இளைஞர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து கொலையாளிகளைக் கைது செய்யக் கோரி பொதுமக்கள் மற்றும் உறவினர்கள் புதன்கிழமை சாலைமறியலில் ஈடுபடடனர்.
இது குறித்துப் போலீஸôர் தரப்பில் தெரிவித்தது:
÷கூடுவாஞ்சேரி அடுத்த பெருமாட்டு நல்லூரைச் சேர்ந்தவர் சுந்தர் மகன் சுபாஷ்(19). விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்தவர். அவரது நண்பர் அய்யாவு மகன் கலைவாணன்(18). இவர்கள் இருவரும் செவ்வாய்க்கிழமை இரவு செல்போன் ரீசார்ஜ் செய்வதற்காக காயரம்பேடு சென்று விட்டு மொபெட்டில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.
அப்போது அவர்களை மொபெட் மற்றும் காரில் சிலர் பின் தொடர்ந்து வந்துள்ளனர். இதனால் அச்சமடைந்த இருவரும் கன்னிவாக்கம் அண்ணாநகர் ரெட்டைமலை சீனுவாசன் தெருவில் மொபெட்டைக் கீழே போட்டு விட்டு தங்களைக் காப்பாற்றுமாறு கூச்சலிட்டுக் கொண்டே ஓடியுள்ளனர்.
÷÷இதற்கிடையே கலைவாணன் அப்பகுதியில் இருந்த ஒரு வீட்டுக்குள் புகுந்து தனது உயிரைக் காப்பாற்றிக் கொண்டார். ஆனால், வாகனங்களில் வந்த மர்ம நபர்கள் ஆயுதங்களைக் காட்டி பொதுமக்களை மிரட்டிவிட்டு சுபாஷை சரமாரியாக வெட்டி விட்டு தப்பி ஓடிவிட்டனர். இதில் படுகாயமடைந்த சுபாஷ் அதே இடத்தில் உயிரிழந்தார்.
÷தகவலறிந்த செங்கல்பட்டு டி.எஸ்.பி. குமார், கூடுவாஞ்சேரி இன்ஸ்பெக்டர் மணிமாறன், மற்றும் போலீஸôர் சென்று சுபாஷின் உடலைப் பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், கலைவாணனிடம் போலீஸôர் விசாரித்ததில், உள்ளாட்சித் தேர்தல் முன் விரோதம் தொடர்பாக 5 பேர் கொண்ட கும்பல் தான் சுபாஷைக் கொலை செய்திருக்கக் கூடும் எனத் தெரிவித்துள்ளார். இது குறித்து கூடுவாஞ்சேரி போலீஸôர் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளைத் தேடி வருகின்றனர்.
÷இந்நிலையில், பெருமாட்டு நல்லூரில் வசிக்கும் மற்றொரு தரப்பைச் சேர்ந்த சத்யா வீட்டை செவ்வாய்க்கிழமை இரவு சிலர் உடைத்து சேதப்படுத்தினர். பின்னர் புதன்கிழமை பிரபு என்பவரின் வீட்டைத் தாக்கி சேதப்படுத்தியதுடன், வீட்டில் இருந்த துணிகளையும் தீ எரித்தனர். இதனால் வீடும் தீப்பிடித்துக் கொண்டது. தகவல் அறிந்த மறைமலை நகர் தீயணைப்புப்படை வீரர்கள் வந்து மேலும் பரவாமல் தீயை அணைத்தனர்.
÷உறவினர்கள் சாலை மறியல்: இதனிடையே, கொலையாளிகளை பிடிக்கக் கோரி சுபாஷின் உறவினர்கள், பொதுமக்கள் புதன்கிழமை காலை கருப்பு பேட்ஜ் அணிந்து, சுபாஷ் உடலுடன் வந்த ஆம்புலன்ûஸ வழியில் நிறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் போலீஸôர் பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து மறியல் விலக்கிக்கொள்ளப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

டெல்டா கடலோரப் பகுதி, மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!
கோபி நயினார் இயக்கத்தில் ராதிகா... காலனி - முதல்பார்வை போஸ்டர் வெளியீடு!

ரூபாய் மதிப்பு சரிவு: 1 டாலர் - ரூ. 93.32! 49 காசுகள் சரிவு!

அர்த்தமில்லாமல் பேசும் உதயநிதி தமிழிசை சௌந்தரராஜன் | BJP | DMK
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

