தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம் வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு பயோ-மெட்ரிக் முறை! உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்! திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!
/

மதுரையில் நகைக்கடையில் ரூ.200 பவுன் மோசடி

மதுரையில் பிரபல தனியார் நகைக் கடையில் 200 பவுன் தங்க நகைகள் மோசடி செய்யப்பட்டுள்ளதாக எழுந்த புகாரின்பேரில் போலீஸôர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On :1 மே 2013, 10:38 pm

மதுரையில் பிரபல தனியார் நகைக் கடையில் 200 பவுன் தங்க நகைகள் மோசடி செய்யப்பட்டுள்ளதாக எழுந்த புகாரின்பேரில் போலீஸôர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரை தெற்குமாசி வீதியில் பிரபல தனியார் நகைக்கடை உள்ளது. இக் கடையில் பொதுமக்களுக்கு நகை விற்பனை செய்யப்படுவதுடன், சிறிய கடைகளுக்கும், அதிகளவில் நகை வாங்குவோருக்கும் முன்பதிவு அடிப்படையில் நகைகள் வடிவமைத்துத் தருகின்றனர்.

அவ்வாறு வெளியில் உள்ள கடைகளுக்கும் வாடிக்கையாளர்களுக்கும் தர வேண்டிய சுமார் 200 பவுன் நகைகள் உரிய நேரத்தில் தரப்படவில்லை எனக் கூறப்படுகிறது. கடந்த ஒன்றரை மாதமாக இதுபோல நகைகள் உரியவர்களிடம் அளிக்கப்படவில்லையாம். இதையடுத்து, கடை நிர்வாகத் தரப்பில் தெற்குவாசல் குற்றப் பிரிவு போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில், கடை ஊழியர்கள் இருவரிடம் போலீஸôர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், கடை மேலாளரையும் விசாரணைக்கு அழைக்கச் சென்றபோது, அவர் வீட்டில் இல்லை எனக் கூறப்படுகிறது. இதையடுத்து, அவரையும் போலீஸôர் தேடி வருவதாகத் தெரிவித்தனர்.

இதுதொடர்பாக மதுரை மாநகர் குற்றப் பிரிவு துணை ஆணையர் பெரோஸ்கான் அப்துல்லாவிடம் கேட்டபோது, சுமார் 200 பவுன் நகைகள் உரியவர்களிடம் ஒப்படைக்கப்படவில்லை என நகைக் கடை சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்யவில்லை. ஆனால், புகாரைப் பெற்றுக்கொண்டு விசாரித்து வருகிறோம். சமீப காலமாக நகை தொடர்பான குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.