நீட் தேர்வுக்காக டெலிகிராம் முடக்கம்! 15 கோடி பயனர்களுக்கான தண்டனை! டெலிகிராம் சி.இ.ஓ. பாவெல் டுரோவ்வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!
/

நெல்லை தேமுதிக அவைத் தலைவர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது

திருநெல்வேலி மேற்கு மாவட்ட தேமுதிக அவைத் தலைவர் கோதை மாரியப்பன் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

Updated On :12 மே 2013, 2:36 am IST

திருநெல்வேலி மேற்கு மாவட்ட தேமுதிக அவைத் தலைவர் கோதை மாரியப்பன் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூரில் கடந்த 1-ஆம் தேதி தேமுதிக சார்பில் மே தின பொதுக் கூட்டம் நடத்தப்பட்டது. இதில் பங்கேற்றுவிட்டு காரில் தனது சொந்த ஊரான சுரண்டைக்கு மாரியப்பன் அன்று இரவு திரும்பிக் கொண்டிருந்தார்.

திருநெல்வேலி- கன்னியாகுமரி நான்குவழி சாலையில் நான்குநேரி பகுதியிலுள்ள சுங்கச் சாவடிக்கு வந்தபோது அங்கிருந்த பணியாளர்கள் அவரிடம் சுங்கக் கட்டணத்தை கேட்டுள்ளனர். தேமுதிகவில் முக்கியப் பொறுப்பில் இருக்கும்போது சுங்கவரி கட்டணத்தை செலுத்த முடியாது என்று அவர் தெரிவித்தாராம்.

இதையடுத்து அவருக்கும், அங்குள்ள பணியாளர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரமடைந்த கோதை மாரியப்பன் தன்னிடம் இருந்த துப்பாக்கியைக் காட்டி பணியாளர்களை மிரட்டியதாகத் தெரிகிறது.

இது தொடர்பான புகாரின்பேரில் நான்குநேரி போலீஸôர் அவரைக் கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் கோதை மாரியப்பனை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய திருநெல்வேலி மாவட்ட ஆட்சியருக்கு, மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் விஜயேந்திரபிதரி பரிந்துரை செய்தார்.

அதை ஏற்று கோதை மாரியப்பனை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய ஆட்சியர் உத்தரவிட்டார். அதன்படி கோதை மாரியப்பன் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.