காற்றாலை மின் உற்பத்தி 2,622 மெகா வாட்டை எட்டியதால், மொத்த மின் உற்பத்தி சனிக்கிழமை 11,000 மெகா வாட் அளவைத் தாண்டியது.
தமிழகத்தில் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக மின் உற்பத்தி சராசரியாக 9,000 மெகா வாட் அளவுக்கு உற்பத்தியாகி வருகிறது. காற்றாலைகள் மூலம் ஓரளவு மின் உற்பத்தி செய்யப்படும்போது மொத்த மின் உற்பத்தி 10 ஆயிரம் மெகா வாட் அளவை எட்டி வந்தது.
இந்த நிலையில் சனிக்கிழமை காற்றாலைகள் மூலம் 2,622 மெகா வாட் மின் உற்பத்தி செய்யப்பட்டது. இதன் மூலம் மொத்த மின் உற்பத்தி அதிகபட்சமாக 11,228 மெகா வாட் அளவை எட்டியது.
இதன் காரணமாக காற்றாலைகள் அதிக அளவில் அமைந்துள்ள தாராபுரம், தூத்துக்குடி உள்ளிட்ட பகுதிகளில் சனிக்கிழமை மின் வெட்டே செய்யப்படவில்லை. நாள் முழுவதும் மின் விநியோகம் வழங்கப்பட்டது.
இதுபோல் சென்னையில் கொளத்தூர் உள்பட மேலும் சில பகுதிகளிலும் சனிக்கிழமை வழக்கமான 2 மணி நேர மின் வெட்டு செய்யப்படவில்லை.
காற்றாலைகளில் நாள்தோறும் சராசரியாக 2000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டால் மின்வெட்டு நேரம் குறைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மே இறுதி வாரத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்க வாய்ப்புள்ளதால் மே இறுதி வாரத்திலிருந்து காற்றாலை மின் உற்பத்தி கணிசமான அளவில் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நாயக்கனேரி மலைக்கு செல்லும் சாலை சீரமைக்கப்படும்: அதிமுக வேட்பாளா்

13 ஆவணங்களை பயன்படுத்தி பொதுமக்கள் வாக்களிக்கலாம்: திருப்பத்தூா் ஆட்சியா்
தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை: இளைஞா் கைது

சென்னை எழும்பூா் - நாகா்கோவில் இடையே இன்று சிறப்பு ரயில்
வீடியோக்கள்

#tnelections2026 | பெண்கள் வாக்கு யாருக்கு? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நேர்காணல் | BJP | DMK | TVK
தினமணி செய்திச் சேவை

தமிழ்நாட்டை மீண்டும் ஆளத் தகுதி படைத்த MK Stalin! | kamal வெளியிட்ட விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு


