/

காங்கிரஸ், திமுகவுடன் கூட்டணி தொடரும்: முஸ்லிம் லீக்

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் கேரளத்தில் காங்கிரஸ் கட்சியுடனும், தமிழகத்தில் திமுகவுடனும் கூட்டணி தொடரும் என்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசியத் தலைவரும், மத்திய வெளியுறவுத் துறை இணை அமைச்சருமான இ. அகமது தெரிவித்தார்.

News image
Updated On :11 மே 2013, 9:10 pm

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் கேரளத்தில் காங்கிரஸ் கட்சியுடனும், தமிழகத்தில் திமுகவுடனும் கூட்டணி தொடரும் என்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசியத் தலைவரும், மத்திய வெளியுறவுத் துறை இணை அமைச்சருமான இ. அகமது தெரிவித்தார்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய செயற்குழுக் கூட்டம் சென்னையில் சனிக்கிழமை நடைபெற்றது. அதில் பங்கேற்ற அகமது செய்தியாளர்களிடம் பேசியது:

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் கேரளத்தில் காங்கிரஸ் கட்சியுடனும், தமிழகத்தில் திமுகவுடனும் கூட்டணி தொடரும். மற்ற மாநிலங்களில் யாருடன் கூட்டணி அமைப்பது என்பது தொடர்பாக முடிவெடுப்பதற்காக எனது தலைமையில் (அகமது) 11 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

பல்வேறு மாநிலங்களில் நீண்ட காலமாக சிறையில் இருக்கும் முஸ்லிம் இளைஞர்கள் தொடர்பான வழக்குகளை மாவட்ட அளவிலான நீதிபதிகளைக் கொண்டு ஆய்வு செய்து விடுவிக்குமாறு மத்திய அரசு அறிவுறுத்தியும் மாநில அரசுகள் அதனை செயல்படுத்தவில்லை. எனவே, முஸ்லிம் சிறைவாசிகள் விஷயத்தில் மத்திய அரசு நேரடி கவனம் செலுத்த வேண்டும்.

பெங்களூர் குண்டு வெடிப்பு தொடர்பாக தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதில் இரு மாநிலங்கள் சம்பந்தப்பட்டுள்ளதால் இந்த வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும். சௌதி அரேபியாவில் கொண்டு வரப்பட்டுள்ள புதிய சட்டம் மூலம் வெளிநாட்டவர்கள் வேலையிழக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

எனவே, அவர்களுக்கு மாற்று ஏற்பாடுகள் செய்யுமாறு அந்நாட்டு அரசுக்கு நாங்கள் நேரில் கோரிக்கை விடுத்துள்ளோம்.

மத்திய அரசு நடத்தும் வேலைவாய்ப்புத் தேர்வில் அரபி உள்ளிட்ட வெளிநாட்டு மொழிகள் விருப்ப பாடமாக இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மதரஸô மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள். எனவே, மீண்டும் அரபியை விருப்பப் பாடமாக்க வலியுறுத்தி பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோரிடம் மனு கொடுக்க உள்ளோம் என்றார் இ.அகமது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.