காஞ்சிபுரம் அருகே அரசு பஸ் எரிப்பு வழக்கில் தாமல் ஊராட்சி மன்றத் தலைவரை தேசிய தடுப்புக்காவல் சட்டத்தில் போலீஸôர் சனிக்கிழமை கைது செய்து வேலூர் சிறையில் அடைத்தனர்.
பா.ம.க. நிறுவனர் ராமாதாஸ், வன்னியர் சங்கத் தலைவர் காடுவெட்டி குரு ஆகியோர் ஏப்ரல் 30-ம் தேதி போலீஸôரால் கைது செய்யப்பட்டனர். இதனால் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் வன்முறைச் சம்பவங்கள் நடைபெற்றன.
ஏப்ரல் 30-ம் தேதி இரவு தாம்பரத்திலிருந்து தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் விழுப்புரம் கோட்டம் சேம்பாக்கம் பணிமனையைச் சேர்ந்த பஸ் (பச 23 ச 2296 - தட எண் 155) காஞ்சிபுரம் வழியாக வேலூருக்கு சென்று கொண்டிருந்தது. இரவு 11 மணிக்கு 37 பயணிகளுடன் காஞ்சிபுரம் அருகே சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் தாமல் அருகே இரவு 11 மணிக்கு பஸ் சென்று கொண்டிருந்தது.
அப்போது தாமலைச் சேர்ந்த ஒரு கும்பல் பயணிகளை இறக்கிவிட்டுவிட்டு, பெட்ரோல் நிரப்பப்பட்ட பாட்டில்களில் தீ வைத்து பஸ்ஸில் தூக்கி வீசினர். இதில் பஸ் தீப்பிடித்து முற்றிலும் எரிந்து சேதமடைந்தது.
இதுதொடர்பாக பா.ம.க.வைச் சேர்ந்த தாமல் ஊராட்சி மன்றத் தலைவர் மணிமாறன் (50), பாலு (24), குமார் (40), துரைசாமி (55), ஏகாம்பரம் (53), முரளி (51),மாரி (29), இளங்கோவன் (30), குமரன் (25), பழனி (30), ஆனந்தன் (30) ஆகியோரை பாலுச்செட்டி போலீஸôர் மே 1-ம் தேதி கைது செய்து வேலூர் சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் தாமல் ஊராட்சி மன்றத் தலைவர் மணிமாறனை தேசிய தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட ஆட்சியருக்கு, எஸ்.பி. சேவியர் தன்ராஜ் பரிந்துரை செய்தார்.
இதைத் தொடர்ந்து அவரை தேசிய தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்ய ஆட்சியர் லி. சித்ரசேனன் சனிக்கிழமை (மே 11) உத்தரவிட்டார்.
இதைத் தொடர்ந்து ஊராட்சி மன்றத் தலைவர் மணிமாறனை போலீஸôர் தேசிய தடுப்புக் காவல் சட்டத்தில் வேலூர் சிறையில் அடைத்தனர்.
இதுவரை 4 பேர் மீது தேசிய தடுப்புக் காவல் சட்டம் பாய்ந்தது: தருமபுரி மாவட்டத்தில் வன்முறையில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டு சேலம் சிறையில் உள்ள தீர்த்தலிங்கம், குபேந்திரன் ஆகியோர் மே 8-ல் தேசிய தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர்.
சென்னை புழல் சிறையில் உள்ள வன்னியர் சங்கத் தலைவர் காடுவெட்டி குரு மே 10-ம் தேதியும், வேலூர் மத்திய சிறையில் உள்ள தாமல் ஊராட்சி மன்றத் தலைவர் மணிமாறன் சனிக்கிழமையும் (மே 11) தேசிய தடுப்புக்காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். இந்த நடவடிக்கை மேலும் தொடரும் என்று போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
அருமனை சந்திப்பில் பிரசாரத்தை நிறைவு செய்த எஸ்.விஜய்தரணி

தூத்துக்குடி மாவட்டத்தில் தோ்தல் பாதுகாப்புப் பணியில் 3,642 போலீஸாா்: ஆட்சியா் தகவல்

நான் இல்லாவிடினும் நான் செய்த சாதனைகள் நிலைத்து நிற்கும்: அமைச்சா் துரைமுருகன்

வாகன நிறுத்துமிட தகராறு: வியாபாரி கொலை வழக்கில் மேலும் 2 போ் கைது
வீடியோக்கள்

#tnelections2026 | பெண்கள் வாக்கு யாருக்கு? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நேர்காணல் | BJP | DMK | TVK
தினமணி செய்திச் சேவை

தமிழ்நாட்டை மீண்டும் ஆளத் தகுதி படைத்த MK Stalin! | kamal வெளியிட்ட விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

