பிளஸ் 2 பொதுத் தேர்வு மதிப்பெண் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களில், ஆன்-லைனில் சலானை பதிவிறக்கம் செய்யத் தவறியவர்களுக்கு மாற்று வழியை அரசுத் தேர்வுகள் இயக்குநர் அலுவலகம் அறிமுகம் செய்துள்ளது.
விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கு ஆன்-லைனில் விண்ணப்பிக்கும் பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதிய மாணவர்கள், விண்ணப்பிக்கும்போது தங்களுடைய விவரங்களைப் பூர்த்தி செய்த பின்னர் 10 இலக்கம் கொண்ட விண்ணப்ப எண்ணுடன் கூடிய ஒப்புகைச் சீட்டை தவறாமல் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.
அவ்வாறு பதிவிறக்கம் செய்யத் தவறும் மாணவர்கள், தேர்வு பதிவு எண், பிறந்த தேதி, பாடம், எதற்காக விண்ணப்பிக்கிறீர்கள் என்ற விவரம் (விடைத்தாள் நகல் அல்லது மறு கூட்டல்), மாணவரின் பெயர், முகவரி, செல்பேசி எண், இ-மெயில் முகவரி ஆகிய விவரங்களை க்ஞ்ங்ட்ங்ப்ல்ப்ண்ய்ங்ஞ்ம்ஹண்ப்.ஸ்ரீர்ம் என்ற மின் அஞ்சலுக்கு அனுப்பி, 10 இலக்க விண்ணப்ப எண்ணைப் பெற்றுக் கொள்ளலாம்.
அல்லது 044 - 28203089, 28221734 ஆகிய எண்களுக்கு ஃபேக்ஸ் அனுப்பியும், 044 - 28278286, 28264513 ஆகிய தொலைபேசி எண்களை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை தொடர்பு கொண்டும் விவரங்களைப் பெற்றுக் கொள்ளலாம் என அரசு தேர்வுகள் இயக்குநர் அலுவலகம்
தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
அருமனை சந்திப்பில் பிரசாரத்தை நிறைவு செய்த எஸ்.விஜய்தரணி

தூத்துக்குடி மாவட்டத்தில் தோ்தல் பாதுகாப்புப் பணியில் 3,642 போலீஸாா்: ஆட்சியா் தகவல்

நான் இல்லாவிடினும் நான் செய்த சாதனைகள் நிலைத்து நிற்கும்: அமைச்சா் துரைமுருகன்

வாகன நிறுத்துமிட தகராறு: வியாபாரி கொலை வழக்கில் மேலும் 2 போ் கைது
வீடியோக்கள்

#tnelections2026 | பெண்கள் வாக்கு யாருக்கு? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நேர்காணல் | BJP | DMK | TVK
தினமணி செய்திச் சேவை

தமிழ்நாட்டை மீண்டும் ஆளத் தகுதி படைத்த MK Stalin! | kamal வெளியிட்ட விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

