தங்கம் விலை சவரனுக்கு இன்று ரூ. 240 குறைவு!மெஸ்ஸி ஹாட்ரிக்... வெற்றியுடன் தொடங்கியது ஆர்ஜென்டீனா!புதுச்சேரி அமைச்சரவை விரிவாக்கம்: மேலும் 3 அமைச்சர்கள் பதவியேற்பு!இன்று தினமணி ‘மாணவா் மலா்’ அறிமுக விழா: அமைச்சா் விஸ்வநாதன் பங்கேற்பு எல் நினோ-வால் தமிழகத்துக்கு கடும் பாதிப்பு: மத்திய வேளாண் அமைச்சா் உ.பி., குஜராத் உள்பட 13 மாநிலங்களில் வருவாய் உபரி: சிஏஜி கச்சா எண்ணெய், எரிவாயு விலை: போருக்கு முந்தைய நிலையை எட்ட பல மாதங்கள் ஆகும்- நிபுணா்கள் தகவல் ஹைதராபாத் சாலைக்கு டிரம்ப் பெயா்! தெலங்கானா காங்கிரஸ் அரசு முடிவு மே மாதத்தில் மொத்த விற்பனை பணவீக்கம் 9.68%
/

குடிநீர்த் தேவைக்காக மேட்டூரிலிருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

மேட்டூர் அணையிலிருந்து குடிநீர்த் தேவைக்காக திறக்கப்படும் நீரின் அளவு விநாடிக்கு 800 கன அடியாக அதிகரிக்கப்பட்டது. இதனால், அணையின் நீர்மட்டம்

Updated On :22 மே 2013, 3:49 am IST

மேட்டூர் அணையிலிருந்து குடிநீர்த் தேவைக்காக திறக்கப்படும் நீரின் அளவு விநாடிக்கு 800 கன அடியாக அதிகரிக்கப்பட்டது. இதனால், அணையின் நீர்மட்டம் 20 அடியாகக் குறைந்தது.

காவிரி டெல்டா மாவட்டங்களின் பாசனத் தேவைக்காக மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீர் நிறுத்தப்பட்ட பிறகு, குடிநீர்த் தேவைக்காக மட்டும் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்படும்.

அதிகபட்சமாக விநாடிக்கு 2,000 கன அடி வரை திறக்கப்படும் நிலையில், கடந்த சில வாரங்களாக விநாடிக்கு 600 கன அடி வீதம் குடிநீருக்காக தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், திங்கள்கிழமை மாலை முதல் குடிநீர்த் தேவைக்காக அணையிலிருந்து திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 800 கன அடியாக அதிகரிக்கப்பட்டது.

அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 100 கன அடிக்கு குறைவாக உள்ள நிலையிலும், அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு அதிகரித்துள்ளதால் நீர்மட்டம் வேகமாகக் குறைந்து வருகிறது.

17 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போதுதான் அணையின் நீர்மட்டம் 20.53 அடியாகக் குறைந்தது.

இதனிடையே, அணை வறண்டுள்ளதால் நிகழாண்டில் குறிப்பிட்ட நாளில் விவசாயப் பணிகளுக்காக அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிட முடியாத நிலை உருவாகியுள்ளது.

இதனிடையே, கர்நாடக முதல்வர் சித்தராமையா, அந்த மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் பரமேஸ்வர் ஆகியோர் தமிழகத்துக்கு தண்ணீர் தருவது சாத்தியமில்லை எனக் கூறியது காவிரி டெல்டா மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.