தங்கம் விலை சவரனுக்கு இன்று ரூ. 240 குறைவு!மெஸ்ஸி ஹாட்ரிக்... வெற்றியுடன் தொடங்கியது ஆர்ஜென்டீனா!புதுச்சேரி அமைச்சரவை விரிவாக்கம்: மேலும் 3 அமைச்சர்கள் பதவியேற்பு!இன்று தினமணி ‘மாணவா் மலா்’ அறிமுக விழா: அமைச்சா் விஸ்வநாதன் பங்கேற்பு எல் நினோ-வால் தமிழகத்துக்கு கடும் பாதிப்பு: மத்திய வேளாண் அமைச்சா் உ.பி., குஜராத் உள்பட 13 மாநிலங்களில் வருவாய் உபரி: சிஏஜி கச்சா எண்ணெய், எரிவாயு விலை: போருக்கு முந்தைய நிலையை எட்ட பல மாதங்கள் ஆகும்- நிபுணா்கள் தகவல் ஹைதராபாத் சாலைக்கு டிரம்ப் பெயா்! தெலங்கானா காங்கிரஸ் அரசு முடிவு மே மாதத்தில் மொத்த விற்பனை பணவீக்கம் 9.68%
/

பாமக வன்முறைச் சம்பவங்கள்:குண்டர் சட்டத்தில் இருவர் கைது

திருவண்ணாமலை மாவட்டத்தில் அரசுப் பேருந்துகளின் கண்ணாடிகளை உடைத்த வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர், குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ்

Updated On :22 மே 2013, 3:48 am IST

திருவண்ணாமலை மாவட்டத்தில் அரசுப் பேருந்துகளின் கண்ணாடிகளை உடைத்த வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர், குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் செவ்வாய்க்கிழமை மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பாமக நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்ட அக்கட்சியின் தலைவர்கள் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து ஏப்ரல் 30 முதல் தமிழகம் முழுவதும் வன்முறைச் சம்பவங்கள் நடைபெற்றன.

இந்நேரத்தில் திருவண்ணாமலை மாவட்டத்தில் மே 1-ஆம் தேதி அரசுப் பேருந்தின் கண்ணாடியை உடைத்ததாக செங்கத்தை அடுத்த அரட்டவாடி கிராமத்தைச் சேர்ந்த பிரபாகரன் (23) என்பவரை செங்கம் காவல் நிலைய போலீஸôர் கைது செய்தனர். இதேபோல, மே 5-ஆம் தேதி போளூர் அருகே பேருந்தின் கண்ணாடியை உடைத்ததாக எழுவாம்பாடி கிராமத்தைச் சேர்ந்த முனுசாமி மகன் சகாதி (36) என்பவர் கைது செய்யப்பட்டார்.

வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள இவர்கள் இருவரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட ஆட்சியர் விஜய் பிங்ளேவுக்கு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெ.முத்தரசி பரிந்துரை செய்தார்.

ஆட்சியர் உத்தரவின்பேரில், செவ்வாய்க்கிழமை இருவரும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். இது குறித்த தகவல், வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள பிரபாகரன், சகாதி ஆகியோருக்குத் தெரிவிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.