ராஜீவ் காந்தியின் 22-ம் ஆண்டு நினைவுநாளையொட்டி ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் உள்ள ராஜீவ் காந்தியின் நினைவிடத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் உள்ளிட்ட தலைவர்கள் செவ்வாய்க்கிழமை மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
÷ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் உள்ள ராஜீவ் காந்தியின் நினைவிடத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் ஞானதேசிகன், மத்திய அமைச்சர் கே.எச்.முனியப்பா, பாகிஸ்தான் சிறையில் படுகொலை செய்யப்பட்ட சரப்ஜித் சிங்கின் சகோதரி தல்பிர் கவுர், அவரது மகள் ஸ்வபன்தீப், தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர் தங்கபாலு, எம்.பி.க்கள் ஜே.எம்.ஆரூண், விஸ்வநாதன், மாணிக் தாக்கூர், ராமசுப்பு, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் யசோதா, வசந்தகுமார், செல்வபெருந்தகை, ராஜீவ் காந்தி நினைவிட சீரமைப்பு குழு உறுப்பினர் முருகானந்தம், மாவட்டக் காங்கிரஸ் தலைவர் சக்கரபாணி, வட்டார காங்கிரஸ் தலைவர் வேலு, நகர காங்கிரஸ் தலைவர் அருள்ராஜ் உள்ளிட்ட கட்சித் தலைவர்கள் ராஜீவ் காந்தியின் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.
÷கர்நாடக மாநில காங்கிரஸ் தொழிற்சங்கத் தலைவர் பிரகாசம் தலைமையில் கர்நாடக மாநிலத்திலிருந்து ராஜீவ் ஜோதி கொண்டு வரப்பட்டது. பின்னர் இந்த ஜோதி தில்லிக்கு எடுத்துச் செல்லப்பட்டு அவரது சமாதியில் வைக்கப்படவுள்ளது. மேலும் சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியிலிருந்து மணிரத்தினம் தலைமையில் மோட்டார் சைக்கிள் மூலமாக ஜோதி கொண்டுவரப்பட்டு ராஜீவ் நினைவிடத்தில் வைக்கப்பட்டது. பின்னர் ராஜீவ் நினைவிடத்தில் சர்வமதப் பிரார்த்தனை நடைபெற்றது. காங்கிரஸ் தலைவர்கள் தீவிரவாத எதிர்ப்பு உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
÷தீவிரவாத எதிர்ப்பு உறுதிமொழி எடுத்துக்கொண்டு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் பேசுகையில், அறிவியல், கணினி மற்றும் தொலைத்தொடர்பு துறைகளில் இந்தியாவை வளர்ச்சியடைய செய்ய மிகவும் பாடுபட்டவர் ராஜீவ் காந்தி. பஞ்சாயத்து ராஜ் சட்டத்தை கொண்டுவந்து அதன் மூலம் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு பெற்றுத் தந்தவர். சிங்கள ராணுவத்தினர் யாழ்ப்பாணத்தை சுற்றிவளைத்து தமிழர்களைத் தாக்கியபோது அங்குள்ள தமிழர்களுக்கு இந்திய விமானப்படை மூலம் உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்களை வழங்கியவர். இலங்கை ராணுவத்தால் சிறைப்பிடிக்கப்பட்ட ஈழத்தமிழர்கள் 5000 பேரை விடுதலை செய்ய உதவியவர். ராஜீவ் காந்தி மீது அவதூறாகப் பேசி வருபவர்களை காங்கிரஸ் கட்சி முழு சக்தியோடு எதிர்கொள்ளும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ஈரானுக்கு எதிரான தற்காலிக போர்நிறுத்தம் நீட்டிப்பு: டிரம்ப்

குழப்பம் நீங்கும் கடக ராசிக்கு: தினப்பலன்கள்!
தொடரும் ஜனநாயகப் பின்னடைவு!

திமுகவினா் கூப்பன் விநியோக வழக்குப் பதிவு: உயா்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் தகவல்
வீடியோக்கள்

#tnelections2026 | பெண்கள் வாக்கு யாருக்கு? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நேர்காணல் | BJP | DMK | TVK
தினமணி செய்திச் சேவை

தமிழ்நாட்டை மீண்டும் ஆளத் தகுதி படைத்த MK Stalin! | kamal வெளியிட்ட விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு


