அரக்கோணம் கடற்படை விமான தளத்தில் (ஐ.என்.எஸ். ராஜாளி) அத்துமீறி நுழைந்ததாக மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் கைது செய்யப்பட்டார்.
திங்கள்கிழமை அதிகாலை படைத்தளத்தின் புளியமங்கலம் கிராம எல்லையோரம் இளைஞர் உள்ளே நுழைந்துள்ளார்.
அப்போது படைத்தளத்தில் தீயணைப்பு நிலையத்தில் பணியிலிருந்த எபிநேசர் அளித்த தகவலின்பேரில், கடற்படை காவலர்கள் அங்கு சென்று இளைஞரை பிடித்தனர். விசாரணையில் அவர் மேற்கு வங்க மாநிலம் தினாஜ்பூர் மாவட்டம் கோல்பூகூர் வட்டம் நந்தாஜ்கர் கிராமத்தை சேர்ந்த சோம்டுடூ (30) என்பதும் மனநலம் சரியில்லாதவர்போல் காணப்பட்டதும் தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து, சோம்டுடூவை ஐ.என்.எஸ் ராஜாளி கடற்படை விமானதள கமாண்டர் புனித்குமார் நகர போலீஸில் ஒப்படைத்தார்.
அவரிடம் நகர காவல் ஆய்வாளர் ராமமூர்த்தி மற்ரும் வேலூர் மாவட்ட க்யூ பிரிவு போலீஸார், எஸ்.பி.சி.ஐ.டி. போலீஸார் விசாரணை நடத்தினர்.
அந்த இளைஞர் உளவு பார்க்க வந்தாரா என்ற கோணத்திலும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.








