திருநெல்வேலி மாவட்டம், குற்றாலம் அருவிகளில் சனிக்கிழமை காலை முதல் தண்ணீர் விழத் தொடங்கியது. இதையடுத்து குற்றாலத்துக்கு சுற்றுலாப் பயணிகள் வரத் தொடங்கியுள்ளனர்.
கடந்த சில தினங்களாக குற்றாலம் பேரருவி வறண்டு போய், அருவியில் தண்ணீர் இல்லாமல் காய்ந்து கிடந்தது. ஆனால் வெள்ளிக்கிழமை பிற்பகலுக்குப் பிறகு பெய்த தொடர் சாரல் மழையின் காரணமாக பேரருவியில் சனிக்கிழமை அதிகாலை முதல் தண்ணீர் விழத் தொடங்கியது.
அதே போல் ஐந்தருவியின் நான்கு கிளைகளில் குறைந்தளவு தண்ணீர் விழுகிறது. அருவிகளில் தண்ணீர் விழும் செய்தி பரவியதையடுத்து சுற்று வட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் அருவிகளில் குளித்து மகிழ்ந்தனர்.
குற்றாலத்திலிருந்து ஐந்தருவி செல்லும் சாலையில் உள்ள தோப்புகளில் உணவு சமைத்து உண்டு மகிழ்ந்தனர். சனிக்கிழமை காலை முதல் மேகமூட்டத்துடன் குளிர்ந்த காற்று வீசியது. பிற்பகலில் ஐந்தருவி பகுதிகளில் சாரல் மழை அதிகமாக இருந்தது. நாள் முழுவதும் குளிர்ந்த காற்று வீசியது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

விளாத்திகுளம் பிளஸ் 2 மாணவி கொலை வழக்கு: குடும்பத்தினருக்கு அச்சுறுத்தலை ஏற்க இயலாது

ஓடையிலிருந்து முதியவா் சடலமாக மீட்பு
பைக்கிலிருந்து தவறி விழுந்ததில் காவலா் உயிரிழப்பு
பெரியகுளத்தில் 70 கிலோ நெகிழிப் பைகள் பறிமுதல்
விடியோக்கள்

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK

Ravindran Duraisamy Interview | டார்கெட் செய்யப்படுகிறாரா திருமாவளவன் ? | CM Vijay | TVK | Thirumavalavan | VCK

150 பாலியல் வழக்குகள், 130 கொலைகள்! தவெக ஆட்சியை விமர்சித்த EPS | ADMK | TVK



