தமிழக அரசு அறிவித்துள்ள 8 சதவீத அகவிலைப் படி உயர்வு தங்களுக்கு எப்போது வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு போக்குவரத்துக்கழக ஊழியர்களிடையே எழுந்துள்ளது.
விலைவாசி உயர்வின் அடிப்படையில் 6 மாதங்களுக்கு ஒருமுறை அகவிலைப் படி உயர்வை மத்திய, மாநில அரசுகள் அறிவித்து வழங்கி வருகின்றன.
இதுபோல் 2013 ஜனவரி மாதத்துக்கான அகவிலைப் படி உயர்வை (8 சதவீத உயர்வு) மத்திய அரசு கடந்த ஏப்ரலில் அறிவித்தது. அதனைத் தொடர்ந்து தமிழக அரசும் 8 சதவீத அகவிலைப் படி உயர்வை அறிவித்து, முன்தேதியிட்டு வழங்க உத்தரவிட்டது.
இதன்படி அனைத்து அரசுத் துறை ஊழியர்களுக்கும் இந்த அகவிலைப் படி உயர்வு வழங்கப்பட்டு விட்டது. ஆனால், போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கு இன்னும் வழங்கப்படவில்லை.
இது குறித்து போக்குவரத்துக் கழக சங்க நிர்வாகிகள் கூறியது:
போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கு மட்டும் ஒவ்வொரு முறையும் அகவிலைப் படி உயர்வு தாமதமாக வழங்கப்பட்டு வருகிறது. அதாவது அடுத்த அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்ட பிறகே, முந்தைய ஆறு மாதத்துக்கான அகவிலைப் படி உயர்வை பெறும் நிலை தொடர்ந்து நீடித்து வருகிறது.
1-9-2010 தேதிக்கு முன்பு வரை இந்த நிலை இல்லை. அரசு அறிவித்தவுடன் எங்களுக்கும் அகவிலைப் படி உயர்வு கிடைத்துவிடும்.
ஆனால், 2010 ஊதிய ஒப்பந்தத்தில் போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கு அரசின் அனுமதி பெற்று அகவிலைப் படி உயர்வு வழங்கப்பட வேண்டும் என்ற புதிய விதி சேர்க்கப்பட்டுவிட்டது.
இதன் காரணமாக, ஒவ்வொரு முறையும் அரசு அறிவித்த பிறகு, போக்குவரத்துத் துறை செயலர் அரசிடம் மீண்டும் அனுமதி பெற்ற பிறகே போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கு வழங்கும் நிலை உள்ளது.
இந்த நிலையை மாற்றும் வகையில் வருகிற 1-9-2013 ஊதிய ஒப்பந்தத்தில், அகவிலைப் படி உயர்வு வழங்க அரசிடம் அனுமதி பெற வேண்டும் என்ற விதியை ரத்து செய்து, பிற அரசுத் துறை ஊழியர்களுக்கு உள்ளதுபோல் அரசு அறிவித்த உடன் போக்குவரத்துக்கழக ஊழியர்களுக்கும் கிடைக்கும் வகையில் வகை செய்ய வேண்டும் என்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

விஐடி பல்கலை. நுழைவுத் தேர்வுக்குத் தயாராவது எப்படி?

தங்கம், வெள்ளி விலை உயர்வு: எவ்வளவு உயர்ந்தது?

வால்பாறையில் வேன் கவிழ்ந்ததில் 9 பேர் பலி: குடியரசுத்தலைவர் இரங்கல்

இது ஒரு மசோதாவின் தோல்வியல்ல… இந்திய ஜனநாயகத்தின் வெற்றி! - சு.வெங்கடேசன் எம்.பி.
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

