சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட பகுதிகளில் காய்கறிகளின் கடும் விலையேற்றத்தால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதில், அதிகபட்சமாக இஞ்சி கிலோ ரூ.240, பீன்ஸ் கிலோ ரூ.100, சிறிய வெங்காயம் கிலோ ரூ.110 என விற்பனை செய்யப்படுகின்றன.
சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர் ஆகிய இடங்களுக்கு காய்கறிகள் கொண்டு செல்லப்படுகின்றன.
இந்நிலையில், அண்மைக்காலமாக காய்கறிகளின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது. இதனால் மாதந்தோறும் காய்கறிகளுக்கென தனி பட்ஜெட்டை ஒதுக்கும் நிலைக்கு நடுத்தரக் குடும்பத்தினர் தள்ளப்பட்டுள்ளனர். கோயம்பேடு மார்க்கெட்டில் விற்பனை செய்யப்படும் காய்கறிகளின் விலை (கிலோவில்): கோஸ் ரூ.20, அவரை ரூ.80, பீன்ஸ் ரூ.100, முருங்கைக்காய் ரூ.70, கேரட் ரூ.60, கத்திரி ரூ.50, கருணை ரூ.30, உருளை ரூ.30, முள்ளங்கி ரூ.30, மாங்காய் ரூ.20, வெண்டை ரூ.40, பீட்ரூட் ரூ.30, பச்சைமிளகாய் ரூ.50, இஞ்சி ரூ.240, வெங்காயம் ரூ.30 முதல் 40 வரை, சிறிய வெங்காயம் கிலோ ரூ.110, நாட்டுத் தக்காளி ரூ.35 முதல் ரூ.45 வரை, கொத்தமல்லி, கறிவேப்பிலை (சிறிதளவு) குறைந்த பட்சம் ரூ.5 முதல் அதிகப்பட்சம் ரூ.10 என விற்பனை செய்யப்படுகின்றன.
இது குறித்து கோயம்பேட்டைச் சேர்ந்த வியாபாரி தியாகராஜன் கூறியது: தமிழகத்தில் காய்கறி விளைச்சல் தற்போது மிகவும் குறைவாக உள்ளது. அப்படி விளைச்சலாகும் காய்கறிகளும் அந்ததந்த பகுதிகளில் உள்ள சந்தைகளிலேயே விற்பனை செய்யப்படுகின்றன.
இதனால் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு அதிக அளவு வருவதில்லை. இங்கு ஆந்திரம், கர்நாடகம் போன்ற அண்டை மாநிலங்களில் இருந்து காய்கறிகள் கொண்டு வரப்படுகின்றன. இதனால் காய்கறிகளின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது என்றார் அவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஸ்ரீவைகுண்டம் பகுதிகளில் காங்கிரஸ் வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

பைக் மீது பொக்லைன் மோதல்: வியாபாரி உயிரிழப்பு

பேய்குளத்தில் தவெக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

கோவில்பட்டி ஒன்றிய பகுதிகளில் அதிமுக வேட்பாளா் பிரசாரம்
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை


