கும்மிடிப்பூண்டி அருகே ஒரு மாதக் கைக்குழந்தையை கொன்றுவிட்டு தந்தை-மகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
ஆரணி அருகே சின்னம்பேடு பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம் (50). விவசாயி. இவரது மகள் மேகலா (17).
மேகலாவுக்கும், அதே பகுதியில் பூக்கடை நடத்தி வரும் பார்த்தசாரதி (25) என்பவருக்கும் தவறான தொடர்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.பார்த்தசாரதிக்கு ஏற்கெனவே திருமணமாகி குழந்தை உள்ளது. இந்நிலையில் கர்ப்பம் தரித்த மேகலாவுக்கு, கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு ஆண் குழந்தை பிறந்தது. இதையடுத்து தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு பார்த்தசாரதியிடம் பல முறை கூறியும் அதற்கு அவர் மறுத்துவிட்டாராம்.
இதனைத்தொடர்ந்து, மேகலா சில நாள்களுக்கு முன்பு பெரியபாளையம் காவல்நிலையத்திற்கு சென்று பார்த்தசாரதியை தன்னுடன் சேர்த்து வைக்குமாறு கேட்டுக்கொண்டார்.
இதன்பேரில், பார்த்தசாரதியை போலீஸார் அழைத்து பேசியுள்ளனர். ஆனால், பார்த்தசாரதி திருமணத்திற்கு சம்மதிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
இச்சம்பவத்தால் அவமானமடைந்த மேகலா மற்றும் அவரது தந்தை முனுசாமி தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தனர்.
இதையடுத்து தங்களின் வீட்டின் அருகே உள்ள வயல்வெளிக்கு திங்கள்கிழமை இரவு சென்ற அவர்கள், இனிப்பில் விஷத்தை தடவி மேகலாவின் கைக்குழந்தைக்கு ஊட்டிவிட்டனர்.
பின்னர் தாங்களும் அதனை சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் இறந்து கிடப்பதை கண்ட அப்பகுதியினர், ஆரணி போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர்.
பின்னர் போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து உடல்களை கைப்பற்றி பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீஸார் தலைமறைவாகியுள்ள பார்ததசாரதியை தேடி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வெற்றிக்குப் போராடும் புதுமுகங்கள்! தொகுதி அலசல் : அந்தியூா்

கொடுமுடி, சிவகிரியில் அடிப்படை வசதிகள் தேவை!

கருமஞ்சிறை பகுதியில் புதிய சமுதாய நலக்கூடம் அமைக்கப்படும்: தோப்பு என்.டி.வெங்காடசலம் உறுதி

2025-26 நிதியாண்டில் தங்கம் இறக்குமதி 24% அதிகரிப்பு: ரூ.6.6 லட்சம் கோடியைத் தாண்டி புதிய உச்சம்
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

