மசோதா தோல்வி! பட்டாசு வெடித்து முதல்வர் ஸ்டாலின் கொண்டாட்டம்!!கொல்கத்தா மீண்டும் தோல்வி முகம் - குஜராத் டைட்டன்ஸ் வெற்றிராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

கொத்தடிமைகளாக இருந்த ஒடிசாவைச் சேர்ந்த 273 பேர் மீட்பு

கும்மிடிப்பூண்டி அருகே செங்கல்சூளையில் கொத்தடிமைகளாக வேலை செய்த ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த 273 பேரை வருவாய்துறை அதிகாரிகள் திங்கள்கிழமை மீட்டனர்.

News image
Updated On :11 ஜூன் 2013, 8:48 pm

கும்மிடிப்பூண்டி அருகே செங்கல்சூளையில் கொத்தடிமைகளாக வேலை செய்த ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த 273 பேரை வருவாய்துறை அதிகாரிகள் திங்கள்கிழமை மீட்டனர்.

கும்மிடிப்பூண்டியை அடுத்த எல்லாபுரம் ஒன்றியம், திருக்கண்டலம் பகுதியில் ஈஸ்வரி செங்கல்சூளை இயங்கி வருகிறது.

இங்கு வட மாநிலத்தைச் சேர்ந்த பல குடும்பங்கள் கொத்தடிமைகளாக நடத்தப்படுவதாக திருவள்ளூர் கோட்டாட்சியர் அபிராமிக்கு தகவல் கிடைத்தது.

இதன்பேரில், கோட்டாட்சியர் அபிராமி தலைமையில் வருவாய்துறை அதிகாரிகள் குறிப்பிட்ட செங்கல்சூளையில் சோதனை நடத்தினர்.÷அப்போது அங்கு ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த 91 குடும்பங்களைச் சேர்ந்த 273 பேர் கொத்தடிமைகளாக இருந்ததது தெரியவந்தது.÷இதையடுத்து அவர்கள் அனைவரும் அங்கிருந்து மீட்கப்பட்டனர்.÷இது குறித்து தகவலறிந்த மாவட்ட ஆட்சியர் கோ.வீரராகவராவ், அங்கு வந்து விசாரணை நடத்தினார்.÷இதனைத்தொடர்ந்து, குழந்தைகளை தவிர்த்து மீதமுள்ள 189 பேருக்கு விடுதலை சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.÷பின்னர் செவ்வாய்க்கிழமை இரவு அவர்கள் அனைவரும் ஒடிசா மாநிலத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இது குறித்து வழக்கு பதிவு செய்த பெரியபாளையம் போலீஸார், தலைமறைவாகியுள்ள செங்கல்சூளை உரிமையாளரை தேடி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.