கோபி அருகே கடைக்குள் லாரி புகுந்த விபத்தில் லாரி உரிமையாளர் உயிரிழந்தார்.
சேலம் மாவட்டம், சங்ககிரி அருகிலுள்ள அக்கம்மாபேட்டையைச் சேர்ந்தவர் முருகேசன் (47), லாரி உரிமையாளர். இவர் மைசூரில் சிமென்ட் கலவையை ஏற்றிச் செல்லும் லாரிகளை வாடகைக்கு விட்டு தொழில் நடத்தி வந்தார்.
வெள்ளிக்கிழமை ஒரு சிமென்ட் கலவை லாரியைப் பழுது பார்ப்பதற்காக மைசூரிலிருந்து ஊருக்கு ஓட்டி வந்தார்; லாரியை அவரே ஓட்டினார். அந்த லாரி, ஈரோடு மாவட்டம், கோபி, கச்சேரி மேட்டில் வெள்ளிக்கிழமை அதிகாலை வந்தது.
அப்போது லாரி திடீரென ரோட்டோரமாக இருந்த கடைக்குள் புகுந்தது. இதில் லாரியை ஓட்டிவந்த முருகேசன் இடிபாட்டுக்குள் சிக்கி சம்பவ இடத்திலேயே இறந்தார்.
இந்த விபத்து குறித்து, கோபி போலீஸ் இன்ஸ்பெக்டர் இளங்கோவன் விசாரணை நடத்தி வருகிறார். விபத்தில் பலியான முருகேசனுக்கு மலர்விழி (40) என்ற மனைவியும் 2 மகன்களும் உள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அறிஞர் அண்ணா, எம்.ஜி.ஆர் சிலைகளுக்கு மலர் தூவி மரியாதை செலுத்திய மோடி!

நாகர்கோவிலில் பிரதமர் மோடி சாலை வலம்! அம்பேத்கர் படத்திற்கு மலர்தூவி மரியாதை!
ஏப்.19-ல் தனுஷின் கர படத்தின் முன் வெளியீட்டு விழா!

லக்னௌவுக்கு எதிராக ஆர்சிபி பந்துவீச்சு; பிளேயிங் லெவனில் மீண்டும் ஹேசில்வுட்!
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

