பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

மாநிலங்களவைத் தேர்தல்: பா.ம.க. முடிவால் கனிமொழிக்கு பின்னடைவு

மாநிலங்களவைத் தேர்தலில் தங்களை ஆதரிக்குமாறு திமுக விடுத்திருந்த கோரிக்கையைப் பாமக திட்டவட்டமாக நிராகரித்துவிட்டது.

News image
Updated On :21 ஜூன் 2013, 7:56 pm

மாநிலங்களவைத் தேர்தலில் தங்களை ஆதரிக்குமாறு திமுக விடுத்திருந்த கோரிக்கையைப் பாமக திட்டவட்டமாக நிராகரித்துவிட்டது.

அதனால் கனிமொழிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

காங்கிரஸின் கைகள் எந்தக் கட்சியைக் காட்டுகிறதோ, அந்தக் கட்சியே வெற்றிபெறக் கூடிய சூழல் தற்போது ஏற்பட்டுள்ளது. இதனால் மாநிலங்களவைத் தேர்தலில் 6-ஆவது இடத்துக்கு போட்டியிடும் திமுக வேட்பாளர் கனிமொழி மற்றும் தேமுதிக வேட்பாளர் ஏ.ஆர். இளங்கோவன் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

தேமுதிவில் இருந்து பிரிந்து செயல்பட்டு வரும் 7 உறுப்பினர்களின் வாக்குகள் போக, மீதம் 22 உறுப்பினர்கள் வாக்குகள் அக் கட்சிக்கு உள்ளன.

திமுகவுக்கு மனித நேய மக்கள் கட்சி (2), புதிய தமிழகம் (2) ஆகிய கட்சிகளின் ஆதரவுகளைச் சேர்த்து மொத்தம் 27 வாக்குகள் அக் கட்சிக்குக் கிடைத்துள்ளன.

இந்நிலையில் திமுக கேட்டிருந்த ஆதரவு கோரிக்கை பாமக (3) நிராகரித்துவிட்டது.

பா.ம.க.வின் 3 எம்.எல்.ஏ.க்களின் மாநிலங்களவைத் தேர்தல் புறக்கணிப்பால் வாக்கு மதிப்பில் மாற்றமிருக்காது எனக் கூறப்படுகிறது. எனவே வாக்கு மதிப்பு அடிப்படையில் வெற்றி தீர்மானிக்கப்படும் என்பதால் 6-ஆவது இடத்துக்கு கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.

காங்கிரஸ் ஆதரவு யாருக்கு? மாநிலங்களவைத் தேர்தலைப் புறக்கணிக்கும் முடிவை பா.ம.க. எடுத்துவிட்ட நிலையில், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 5 எம்.எல்.ஏ.க்களின் வாக்குகளை தி.மு.க. எதிர்பார்த்துக் காத்திருக்கிறது.

நாடாளுமன்றத் திமுக குழு தலைவர் டி.ஆர்.பாலு, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியைச் சந்தித்துப் பேசியபோது, மக்களவைத் தேர்தல் கூட்டணியைப் பற்றியெல்லாம் முக்கியத்துவம் கொடுத்துப் பேசவில்லை என்று கூறப்படுகிறது. தற்போது மத்தியில் நடைபெற்று வரும் காங்கிரஸ் ஆட்சி 5 ஆண்டுகள் நிறைவு செய்யும் வரை திமுக உறுதியாக ஆதரவு தரும் என்று மட்டும் உறுதியளித்ததாகத் தெரிகிறது. இதனால் திமுகவை ஆதரிப்பதில் காங்கிரஸ் தலைமை தயக்கம் காட்டுவதாகச் சொல்லப்படுகிறது.

மக்களவைத் தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிடுவோம் என்ற உறுதியுடன் தேமுதிக ஆதரவு கேட்பதால் அதற்கு ஆதரவு தரலாமா என்ற எண்ணம் காங்கிரஸýக்கு ஏற்பட்டுள்ளது.

டி.ஆர்.பாலுவைச் சந்தித்தபோது தேமுதிக முதலில் ஆதரவு கேட்டதால் அந்தக் கட்சிக்கு ஆதரவு தருவதாக வாக்குறுதி அளித்துவிட்டது போல சோனியாகாந்தி தெரிவித்துள்ளார்.

அதேசமயம் திமுகவுக்கான கதவுகளை மூடிவிடவில்லை என்றும் அவர் கூறியதாகத் தெரிகிறது.

முக்கிய நிர்வாகிகளிடம் ஆலோசித்து முடிவை தெரிவிப்பதாக சோனியா காந்தி கூறியுள்ளார்.

இதற்கிடையில் தமிழக காங்கிரஸ் தலைவர்கள் சிலர் தேமுதிகவுக்கு ஆதரவு பெற்றுத் தரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிகிறது. ஒருவேளை, தேமுதிகவை காங்கிரஸ் ஆதரிக்குமானால், 2 கட்சிகளின் வாக்குகளைச் சேர்த்து மொத்தம் 27 வாக்குகள் உள்ளன. காங்கிரஸ் கட்சியின் ஆதரவு தே.மு.தி.க.வுக்கு என உறுதியானால், தி.மு.க. வேட்பாளர் கனிமொழிக்கும் 27 வாக்குகள் உள்ளன.

அதிமுகவின் பங்கு: அதிமுக மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 5 இடங்களில் வெற்றி பெறுவதற்கான 170 வாக்குகள் போக, மீதம் தேமுதிகவில் இருந்து பிரிந்து செயல்படும் 7 உறுப்பினர்கள் வாக்குகள் உள்ளன. இந்த வாக்குகளை யாருக்கு எதிராக அதிமுக பயன்படுத்தப் போகிறது என்பதைப் பொருத்தும் வெற்றி வாய்ப்பு உள்ளது.

போட்டியில் உள்ள திமுக - தேமுதிக ஆகிய இரு கட்சிகளில் எந்தக் கட்சியை வெற்றிபெறச் செய்யலாம் என்ற முடிவை எடுக்கும் நிலையில் தற்போது அதிமுகவும் காங்கிரஸ் கட்சியும் உள்ளன. எனவே அதிமுக, காங்கிரஸ் கட்சியின் முடிவைப் பொருத்து தி.மு.க. வேட்பாளர் கனிமொழி அல்லது தேமுதிக வேட்பாளர் இளங்கோவன் ஆகியோரின் வெற்றி தீர்மானிக்கப்படும்.

காங்கிரஸýம் புறக்கணிப்பா? மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் எந்தக் கட்சியுடன் கூட்டணி அமைப்பது குறித்து என்று காங்கிரஸ் இன்னும் தெளிவாக முடிவெடுக்கவில்லை.

இதனால் தேமுதிக - திமுக ஆகிய இரு கட்சிகளையும் பகைத்துக் கொள்ளக்கூடாது என்று விரும்புகிறதாம். எனவே, மாநிலங்களவைத் தேர்தலில் வாக்களிக்காமல் புறக்கணிக்கலாமா என்பது தொடர்பாகவும் காங்கிரஸ் தலைமை ஆலோசித்து வருகிறதாம்.

வரும் சனிக்கிழமை அல்லது ஞாயிற்றுக்கிழமை காங்கிரஸ் தன் முடிவை அறிவிக்கும் எனச் சொல்லப்படுகிறது. ஒருவேளை, மாநிலங்களவைத் தேர்தலை காங்கிரஸ் கட்சி புறக்கணித்தால்

வாக்கு மதிப்பு மற்றும் முன்னுரிமை அடிப்படையில் தி.மு.க. வெற்றிபெறக் கூடும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.