வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!ஆண்டுதோறும் மின்கட்டண உயர்வு என்பது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது: அமைச்சர் நிர்மல் குமார்மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் சி. விஜயபாஸ்கர்!அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு! மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல் இருமல் மருந்து விற்கத் தடை!நடிகர் ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு
/

10-ஆம் வகுப்பு மதிப்பெண் பட்டியலில் குளறுபடி

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 10-ஆம் வகுப்பு மதிப்பெண் பட்டியலில் பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்டதால் மாணவர்கள் செய்வதறியாது தவித்தனர்.

Updated On :22 ஜூன் 2013, 3:37 am IST

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 10-ஆம் வகுப்பு மதிப்பெண் பட்டியலில் பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்டதால் மாணவர்கள் செய்வதறியாது தவித்தனர்.

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் கடந்த மாதம் 31-ஆம் தேதி வெளியானது.

மதிப்பெண் சான்றிதழ்கள் ஜூன் 20-ஆம் தேதி அந்தந்தப் பள்ளிகளில் வழங்கப்படும் என்று தேர்வுத்துறை அறிவித்திருந்தது.

இந்நிலையில் வியாழக்கிழமை அனைத்துப் பள்ளிகளிலும் மாணவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பிச்சிவாக்கம், உள்ளாவூர், குண்டுகருமேடு, வடக்குமனையம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் உள்ள அரசு மேல்நிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில் 10-ஆம் வகுப்பு எழுதிய மாணவர்களின் மதிப்பெண் சான்றிதழ்களில் பல்வேறு குளறுபடிகள் இருந்தன.

அதாவது உரிய மாணவரின் புகைப்படத்துக்கு பதிலாக மற்றொரு மாணவரின் புகைப்படம், ஊர் பெயரில் எழுத்துப் பிழை, ஊர் பெயரில் பின்கோடு மாற்றம் உள்ளிட்ட பல்வேறு குறைபாடுகள் இருந்தன. இதனால் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

இது குறித்து சம்மந்தப்பட்ட பள்ளி ஆசிரியர்கள் மாவட்டக் கல்வி அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தனர்.

இப்புகாரைத் தொடர்ந்து மாவட்டக் கல்வி அதிகாரிகளின் வழிகாட்டுதலின் பேரில் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தேர்வுத் துறை அலுவலகத்துக்கு நேரில் சென்று உரிய பிழைகளை திருத்தி தரக் கோரி ஆசிரியர்கள் அணுகினர்.

அடுத்த ஓரிருநாளில் உரிய பிழைகள், புகைப்படங்கள் திருத்தி தருவதாக தேர்வுத்துறை உறுதியளித்துள்ளது.

இந்த ஆண்டு 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஆரம்பித்தது முதலே பல்வேறு குளறுபடிகளை கல்வித்துறை சந்தித்து வந்தது. 10-ஆம் வகுப்பு விடைத்தாள்கள் மாயமானது தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் மதிப்பெண் சான்றிதழில் ஏற்பட்டுள்ள குளறுபடி கல்வித் துறை மீது பெற்றோர்கள் வைத்துள்ள நம்பிக்கை கேள்விக்குறியாகி உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.